ஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்!
மனைவி மீது காப்பியை ஊற்றிய கணவன் கைது செய்யப்பட்டார்
சென்னை புளியந்தோப்பை சேர்ந்தவர் மகேந்திர குமார். 50 வயதாகிறது. பெரம்பூரில் ஒரு செருப்பு வைத்து நடத்தி வருகிறார். மனைவி பெயர் மஞ்சுளா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளளனர்.
மகேந்திர குமாருக்கு திடீரென குழப்பம் வந்து விட்டது. கடந்த சில வருஷங்களாகவே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். அதனால் வேலைக்கும் சரியாக போகாமல், தொழிலம் நஷ்டத்தில் போயுள்ளது.

இதனால் கணவன் - மனைவிக்கு இடையே தினமும் சண்டை சச்சரவும் நடந்து வந்துள்ளது. குடிப்பழக்கத்தை விட்டு தொலைக்குமாறு பலமுறை மஞ்சுளா மன்றாடி கேட்டும், அதை மகேந்திர குமார் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. இதே பிரச்சனையை வைத்து இப்போதும் இருவருக்குள்ளு சண்டை வந்துள்ளது.
வாக்குவாதம் முற்றி தகராறும் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மகேந்திர குமார், அப்போது அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த காப்பியை எடுத்து மஞ்சுளாவின் மீது ஊற்றிவிட்டார்.
கொதிக்கும் காப்பியை தன் மேல் பட்டதால் துடிதுடித்து கதறி அழுதார் மஞ்சுளா. கதறல் சத்தம் கேட்ட அங்கிருந்தவர்கள் மஞ்சுளாவை உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். இது குறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மகேந்திர குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications