தனிக்குடித்தனத்துக்கு மறுத்த காதல் மனைவி, தொண்டையில் குத்திக் கொன்ற கணவன்
சென்னை: மாமியார் வீட்டில் இருக்க பிடிக்காத கணவன், மனைவி தனிக்குடித்தனம் வருமாறு அழைத்த போது ஏற்பட்ட தகராறில், காதல் மனைவியை இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். சென்னை கே.கே.நகரில் நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதியில் நேற்று பரபரப்பு நிலவியது.
சென்னை கே.கே.நகர் நெசப்பாக்கம் பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வருகிறார்.
இவர் சந்தியா (20) என்பரை காதலித்து வந்த நிலையில், கடந்த 3 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்த கொண்டார்.

மாமியார் வீடு
காதல் திருமணம் செய்த போதே சந்தியா தனது கணவர் அருண்குமாரிடம் என், அப்பா, அம்மா நம்முடன் வசிப்பார்கள் என தெளிவாக கூறியுள்ளார். இதற்கு அப்போது அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதன்படி எல்லோரும் ஒரே வீட்டில் வசித்துள்ளார்கள்.

வாடகைக்கு வீடு
3 மாதம் காதல் மனைவி மற்றும் அவரது பெற்றோருடன் சேர்ந்து வசித்த அருண்குமாருக்கு சந்தியாவின் பெற்றோர் உடன் வசிப்பது பிடிக்காமல் இருந்துள்ளது. இதனால் வாடகைக்கு அருண்குமார் தனியாக வீடு பார்த்து வந்துள்ளார்.

வாடகைக்கு வீடு
3 மாதம் காதல் மனைவி மற்றும் அவரது பெற்றோருடன் சேர்ந்து வசித்த அருண்குமாருக்கு சந்தியாவின் பெற்றோர் உடன் வசிப்பது பிடிக்காமல் இருந்துள்ளது. இதனால் வாடகைக்கு அருண்குமார் தனியாக வீடு பார்த்து வந்துள்ளார்.

புதுவீடு
இந்நிலையில் அருண்குமார் ராமாவரம் பகுதியில் வாடகைக்கு வீடு பார்த்துள்ளார். அந்த வீட்டில் காதல் மனைவி சந்தியாவுடன் வசிக்க விருப்பமில்லை என்று, அவரிடம் தனது விருப்பத்தை கூறியுள்ளார். மேலும் தனியாக வீடு பார்த்த விஷயத்தையும் கூறியுள்ளார். ஆனால் சந்தியா, பெற்றோரை விட்டு தனிக்குடித்தனம் செல்ல விரும்பவில்லை என கூறப்படுகிறது.

கொலை செய்த கணவன்
நேற்று (சனிக்கிழமை) காலை, சந்தியா மற்றும் அருண் குமார் இடையே தனிக்குடித்தன விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென ஆத்திரமடைந்த அருண்குமார், மனைவி சந்தியாவின் தொண்டையில் கத்தியால் குத்தியுள்ளார். தடுக்க வந்த மாமியார் சரிதாவையும் கையில் அவர் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் தாய் மகள் இருவரும் சரிந்தனர். இதையடுத்து அங்கிருந்து அருண்குமார் தப்பிவிட்டார்.

மனைவி சாவு
இந்நிலையில் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். சந்தியா மற்றும் அவரது தாயார் சரிதா ஆகியோரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சந்தியா பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தாய் சரிதாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கணவன் கைது
இந்த சம்பவம் தொடர்பாக எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த அருண்குமாரை கைது செய்தனர். அப்போது போலீசார் நடத்திய விசாரணையில், காதல் மனைவி சந்தியா, தனது தாய் , தந்தையைவிட்டு வர மறுத்ததும் அதற்காக அவர் ஆத்திரத்தில் கொலை செய்தது தெரியவந்தது. காதல் மனைவியை கணவனே 3 மாதத்தில் கொலை செய்த சம்பவம் கே.கே.நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications