Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனைவிகளுக்கு ஸ்கூட்டி வாங்கி தரும் கணவன்களே.. தயவு செய்து இதை பாருங்க.. இப்படிக்கு லாரி ஓட்டுநர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மனைவிகளுக்கு ஸ்கூட்டர் வாங்கி தரும் கணவர்களே தயவு செய்து ரூல்ஸையும் சொல்லி கொடுங்கள் என்று லாரி ஓட்டுநர்கள் நொந்தபடி சொல்கிறார்கள். எந்த நிமிடத்தில் எங்கு பெண்கள் ஸ்கூட்டியில் உள்ளே வந்து விடுவார்கள் என்ற அச்சத்தில் ஓட்டும் நிலை இருப்பதாக கனரக வாகன ஓட்டுநர்கள் தெரிவிக்கிறார்கள். ஏனெனில் இண்டிகேட்டர் போடுவது இல்லை.. சட்டென திடீரென பிரேக் பிடித்து வாகனத்தை நிறுத்துவது என நெடுஞ்சாலையில் இவர்களது சாகச பயணம் சிக்கலை தருவதாக டிரைவர்கள் புலம்புகிறார்கள்.

சென்னை, கோவை, திருப்பூர், தாம்பரம், திருச்சி, சேலம், மதுரை போன்ற பெரிய நகரங்களிலும் சரி, மற்ற நகரங்களிலும் சரி, காலையிலும் மாலையிலும் ஏராளமான பெண்கள் வேலைக்கு ஸ்கூட்டரில் செல்வதை காண முடியும். அதேபோல் ஸ்கூட்டரில் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு இறக்கிவிடவும், பள்ளியில் இருந்து ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு வருவதையும் காண முடியும்.

Husbands who buy scooters for their wives please teach them the rules Chennai Lorry drivers

ஸ்கூட்டர் பயணம்

இது சர்வ சாதாரணமான ஒன்று..அதேநேரம் சில பெண்கள் ஸ்கூட்டரை எப்படி ஓட்டுவது என்பது குறித்து சரியான புரிதல் இல்லாமல் குழந்தைகளை வைத்துக் கொண்டு ஆபத்தான முறையில் பயணிக்கிறார்கள். சிலர் வேலைக்கு செல்லும் போதும் ஆபத்தான முறையில் பயணிக்கிறார்கள். இவர் பயணிக்கும் முறை என்பது இவர்களை மட்டுமல்ல, இவர்கள் முன்பாக செல்லும் வாகன ஓட்டிகளையும், பின்னால் வரும் வாகன ஓட்டிகளையும் பாதிக்கிறது. சில நேரங்களில் விபத்தும் ஏற்படுகிறது.

விதிகளை பின்பற்றுவது இல்லை

குறிப்பாக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சில பெண்கள், ஸ்கூட்டரில் செல்லும் போது, விதிகளை முறையாக பின்பற்றுவது இல்லை என்றும், பிரேக் பிடிக்க வேண்டிய இடத்தில் பிடிக்காமல், பிரேக் பிடிக்கவே கூடாத இடத்தில் திடீரென வேகத்தை குறைக்கும் செயலில் ஈடுபடுகிறார்கள் என்றும், இது லாரி டிரைவர்களான தங்களுக்கு பயத்தை தருவதாகவும் கவலை தெரிவித்தனர். பலர் டிரைவிங் லைசென்ஸ் வைத்துள்ளார்களா இல்லையா என்றே தெரியவில்லை என்று கூறும் டிரைவர்கள், ரூல்ஸ் எதுவுமே தெரியாமல் கண் மூடித்தனமாக சாலையை கடப்பது, அல்லது சாலையின் குறுக்கே திடீரென வருவதாகவும் குற்றம் சாட்டினார்கள்.

டிரைவர்கள் குற்றச்சாட்டு

சாலைகளில் வாகனத்தை ஓட்டும் போது, திடீரென சாலையின் நடுப்பகுதியோ அல்லது இடதுபகுதிக்கோ பின்னால் வரும் வாகனங்களை கவனிக்காமல் வருகிறார்கள் என்றும் கனரக வாகன டிரைவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இவர்கள் அப்படி கிராஸ் செய்யும் போது, இண்டிகேட்டர் போடுவது இல்லை என்றும், திடீரென சாலையில் இடதுபுறம் வளைத்து செல்வது, பின்னால் வரும் வாகனங்களை கவனிக்காமல் அப்படியே சாலையிலேயே நிறுத்துவது அல்லது சாலையில் வேகத்தை குறைத்து அப்படியே தடுமாறுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக டிரைவர்கள் கூறுகிறார்கள்.

பிரேக் பிடிப்பது இல்லை

இதனால் இவர்கள் மீது மோதிவிடக்கூடாது என்ற அச்சத்தில் வண்டியை ஓட்டும் போது விபத்து ஏற்படுகிறது என்றும் டிரைவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். ஸ்கூட்டரில் வரும் பெண்கள் பிரேக்கை பிடிக்காமல் நேராக வாகனத்தின் அடியில் கூட சில நேரம் விட்டு விடுகிறார்கள் என்றும் லாரி டிரைவர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

போக்குவரத்து விதிகள்

முறையான போக்குவரத்து விதிகளை புதிதாக ஸ்கூட்டர் ஓட்டும் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும், ஓட்டுநர் உரிமம் வாங்கிய பின்னர் வாகனத்தை இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.பெண்கள் தான் இப்படி ஓட்டுகிறார்களா, ஆண்கள் இப்படி இல்லையா என்று டிரைவர்களிடம் கேட்ட போது, ஆண்களிலும் பலர் அப்படி இருக்கிறார்கள் என்றாலும், குழந்தைகளை வைத்துக் கொண்டு தடுமாற்றத்துடன் ஸ்கூட்டரில் வரும் பெண்கள் திடீரென உள்ளே வந்துவிடுவதால் விபத்து அபாயம் அதிகமாக இருக்கிறது என்று கூறினார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+