அந்தவொரு கேள்வியால் ஸ்டன் ஆன இந்திய மாணவர்.! அமெரிக்க விசா மறுப்பு! இப்படி கூட நடக்குமா.. ஷாக்
சென்னை: அமெரிக்காவில் பட்டப்படிப்பைப் படிக்க வேண்டும் என்ற கனவில் இருந்த மாணவருக்கு மிக மோசமான சம்பவம் நடந்துள்ளது. டிரம்ப் வந்த பிறகு ஏதேதோ காரணங்கள் சொல்லி நிராகரிக்கும் போக்கும் அதிகரித்துள்ள நிலையில், இந்த இளைஞருக்கு நேர்ந்தது இப்போது பேசுபொருள் ஆகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்கள் படிப்பிற்காக வெளிநாடு செல்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெளிநாட்டில் படித்தால் நல்ல வேலையைப் பெறலாம் என்பதாலேயே பலரும் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். அப்படி இந்திய மாணவர்கள் விரும்பி செல்லும் நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் பேர் அமெரிக்காவுக்குப் படிக்கச் செல்கிறார்கள்.

டிரம்ப் வந்த பிறகு எல்லாமே மாறிடுச்சு
கடந்தாண்டு வரை அமெரிக்காவுக்குப் படிக்கச் செல்வோருக்கு எந்தவொரு சிக்கலும் இல்லாமலேயே இருந்தது. ஆனால் டிரம்ப் வந்த பிறகு எல்லாம் மாறிவிட்டது. உரிய விசா பெற்று அமெரிக்காவில் தங்குவோர் கூட பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். சிறிய தவறுகளுக்குக் கூட மொத்தமாக நாடு கடத்தும் சூழலே இருக்கிறது. அதேபோல விசா கோரி விண்ணப்பித்தாலும் ஏதேதோ காரணங்கள் சொல்லி நிராகரிக்கும் போக்கும் அதிகரித்துள்ளது.
அப்படி தான் அமெரிக்காவில் படிக்க எஃப்1 விசா கோரி விண்ணப்பித்த மாணவர் ஒருவருக்கு ரொம்பவே வினோதமான விஷயம் நடந்துள்ளது. பொதுவாகப் படிக்க எஃப்1 விசா பெற்று அமெரிக்கா செல்லும் மாணவர்களிடம் கல்வி மற்றும் பல்கலைக்கழகங்கள் குறித்தே கேள்விகளைக் கேட்பார்கள். ஆனால், இங்கு அந்த இளைஞரிடம் படிப்பு தொடர்பான டெக்னிக்கல் கேள்விகளை எல்லாம் அமெரிக்க அதிகாரி கேட்க ஆரம்பித்தார்.
எதிர்பார்க்காத கேள்வி
இதை அந்த இளைஞர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இருந்த போதிலும் பதற்றமடையாத அந்த மாணவர் அமைதியாகவும், தெளிவாகவும் பதிலளித்த எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்திருக்கிறார். இருந்த போதிலும் ஏதேதோ காரணங்களைச் சொல்லி அந்த அதிகாரி விசாவை நிராகரித்துவிட்டார். மீண்டும் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
தனக்கு நடந்தது குறித்து அந்த நபர் ரெடிட்டில் தளத்தில், "எனது F1 விசா நேர்காணல் ஹைதராபாத் தூதரகத்தில் நடந்தது. 30 வயதான அமெரிக்க ஆண் விசா அதிகாரி ஒருவர் நேர்காணல் எடுத்தார். பிரிவு 214(b)-ன் கீழ் எனது விசா நிராகரிக்கப்பட்டது. எனது விசா நேர்காணலில் என்ன தவறு நடந்தது. நான் அடுத்த முறை எதை திருத்திக் கொள்ள வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளவே எனது அனுபவத்தை இங்குப் பகிர்கிறேன்" என்றார்.
ஓவரா இருக்கே
விசா நேர்காணல் வழக்கம்போலே தொடங்கியதாம். முதலில் படிப்பு மற்றும் பல்கலைக்கழகம் குறித்து அந்த அதிகாரி சில கேள்விகளைக் கேட்டுள்ளார். அப்போது திடீரென அவர் தொழில்நுட்ப கேள்விகளைக் கேட்கத் தொடங்கியுள்ளார். அரே (Array), லிங்க்ட் லிஸ்ட் (linked list), லினியர் ரிக்ரஷன் (linear regression) எனக் கேள்வி மேல் கேள்வி கேட்டுள்ளார். பொதுவாக வேலை நேர்காணல் அல்லது பல்கலைக்கழக நேர்காணல்களில் தான் இதுபோன்ற கேள்விகளைக் கேட்பார்கள். ஆனால், இங்குச் சாதாரண விசா நேர்காணலிலேயே இந்தளவுக்குக் கேட்டுள்ளனர்.
அமெரிக்கா விசா நிராகரிப்பு
உண்மையைச் சொல்லப்போனால் அந்த மாணவர் இதுபோன்ற கேள்விக்கு ரெடியாகி அங்குச் செல்லவில்லை. ஆனாலும், இதுபோன்ற கேள்விகள் வந்ததால் அவர் பயப்படவும் இல்லையாம். எல்லா கேள்விகளுக்கும் நம்பிக்கையுடன் பதிலளித்துள்ளார். பின்னர் கடைசியாக எந்த பல்கலைக்கழகத்தில் சேர போகிறீர்கள் எனக் கேட்டுள்ளார். இவர் அமெரிக்காவில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகம் ப்ளூமிங்டன் எனச் சொல்லியுள்ளார். அங்குள்ள டேட்டா சயின்ஸ் பிரிவுகள் குறித்து விசாரித்த அதிகாரி, பிரிவு 214(b)-ன் கீழ் விசாவை நிராகரிப்பதாகச் சொல்லியுள்ளார்.
இளைஞர்களுக்குக் குழப்பம்
இதுவே அந்த இளைஞருக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. விசாவுக்கு ஏன் இதுபோன்ற கேள்விகளைக் கேட்டார்.. அப்படியே கேட்ட கேள்விகளுக்கு நம்பிக்கையுடன் பதில் சொன்ன போதிலும், அது குறித்துப் பேசாமல் விசாவை நிராகரித்தது ஏன் என்று புரியாமல் குழம்பியுள்ளார். இதன் காரணமாகவே அவர் தனது அனுபவத்தை ரெட்டிட் தளத்தில் பகிர்ந்துள்ளார். டிரம்ப் வருகைக்குப் பிறகு இதுபோலத் தான் விசா நேர்காணல் மாறிவிட்டதாகச் சிலர் பதிவிட்டுள்ளனர். விசாவை நிராகரிக்க வினோதமான பல காரணங்களை அதிகாரிகள் சொல்வதாகவும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications