பரங்கிப்பேட்டையில் ஹைட்ரோகார்பன் கிணறு தோண்ட விண்ணப்பம்.. சட்டசபையில் அவசர கவன ஈர்ப்பு தீர்மானம்
சென்னை: பரங்கிபேட்டையில் புதிதாக ஹைட்ரோகார்பன் கிணறு தோண்டுவதற்கான விண்ணப்பத்தை ஹெச்ஓஇசிஎல் நிறுவனம் அளித்துள்ளது. இது தொடர்பாக அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை எம்.எல்.ஏக்கள் தமிமுன் அன்சாரி, டி ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), மாரிமுத்து ஆகியோர் கொண்டு வந்தனர்.

தமிமுன் அன்சாரி பேசியதாவது:- கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதியில் சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பரங்கிப்பேட்டை நகரத்தில் இருந்து 18 கிமீ தொலைவில் HCOIL நிறுவனம் சார்பில் புதிதாக ஹைட்ரோ கார்பன் கிண்றுகளை தோண்ட விண்ணப்பம் சமர்பித்து இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன? என்று கேள்வி எழுப்பினார்.
மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்): ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் அந்த பகுதியில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலை குறித்து அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்" என்றார்.
அமைச்சர் ராஜீவ் இதற்கு பதில் அளித்து கூறியதாவது:- "ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க திமுக அதிமுக ஆட்சியில் தான் அனுமதி தரப்பட்டது. மேலும் கிணறுகளை அமைக்க கடந்த ஜூன் 1 ஆம் தேதி ஹெச்ஓஇசிஎல் நிறுவனம் விண்ணப்பித்தது. விண்ணப்பம் கடலோர மண்டல மேலாண்மை குழுமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் சமரசத்திற்கு இடம் அளிக்காமல் அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ளும்" என்றார். அமைச்சர்


Click it and Unblock the Notifications
