Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசியலில் குதித்த விஜய்.. வந்து விழுந்த கேள்வி.. மிக தெளிவாக அஜித் சொன்ன பாயிண்ட்! நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: பத்மபூஷன் விருது பெற்ற அஜித் குமார், சக நடிகர்கள் அரசியலுக்கு வருவது தொடர்பாகச் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார். மேலும், அவர் அரசியலுக்கு வரலாம் எனச் சிலர் சொல்லி வரும் நிலையில், அது தொடர்பாகவும் சில கருத்துகளைக் கூறியிருக்கிறார்.

இப்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவர் சினிமாவுக்குள் வந்து 33 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதற்கிடையே கலைத் துறையில் இவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசு இவருக்குப் பத்ம பூஷன் விருதை அறிவித்திருந்தது. கடந்த திங்கள்கிழமை டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இவர் பத்ம பூஷன் விருதைப் பெற்றார்.

Ajith Vijay politics

அஜித்

இந்தச் சூழலில் நடிகர் அஜித் குமார் ஆங்கில ஊடகமான இந்தியா டுடேவுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் நடிகர்கள் அரசியலுக்கு வருவது தொடர்பாகச் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும், அஜித் கூட அரசியலுக்கு வரலாம் எனச் சிலர் சொல்லி வரும் நிலையில், அதைத் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.

விஜய் அரசியலுக்கு வந்துள்ளது தொடர்பாக சக நடிகர்களின் அரசியல் குறித்து என்ன நினைக்கிறீர்கள்.. நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அஜித், "தனிப்பட்ட முறையில் எனக்கு அரசியலில் எந்தவொரு ஆசையும் இல்லை.. எனது சக நடிகர்கள் அரசியலில் குதித்துள்ளது என்பது அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்.. நான் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவருக்கும் வாழ்த்து

ஜனநாயகத்தின் சிறப்பம்சம் என்ன தெரியுமா... மக்கள் தங்கள் தலைமையை தாங்களே தேர்ந்தெடுக்க முடியும். எனவே, எனது சக நடிகர்கள் மட்டுமின்றி.. அரசியல் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நம்பி அரசியலில் இறங்கும் அனைவருக்கும் வெல்ல வேண்டும் என்பதே விருப்பம்" என்றார்.

தெளிவான விளக்கம்

சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவதன் மூலம் அவர்களின் ரசிகர்கள் எளிதாக வாக்குகளாக மாறுமா என்ற கேள்விக்கு அவர், "சரி நான் புரியும்படி சொல்கிறேன்.. பொதுவாக ஒரு படத்தைப் பார்க்கும் போது பலரும்.. இதை இப்படி எடுத்திருக்கலாம்.. அப்படி எடுத்திருக்கலாம்.. இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் எனச் சொல்வார்கள். அப்படிச் சொல்வது எல்லாருக்கும் ஈஸி.. ஆனால் சினிமாவில், யாருமே ஒரு மோசமான படத்தை எடுக்க வேண்டும் என வேலை பார்ப்பதில்லை.. வெளியில் இருந்து கொண்டு ஒன்றை ஜட்ஜ் செய்வதும், பரிந்துரை வழங்குவதும் ஈஸி.

மிகவும் சவாலானது

அரசியல் என்பதும் இதே போன்றது தான். வெளியே இருந்து கொண்டு ஜட்ஜ் செய்வதும் கொள்கைகளைப் பரிந்துரைப்பது எளிது.. ஆனால் நீங்கள் களத்தில் இருக்கும் போதுதான் உண்மையான பிரச்சினைகளைப் புரிந்துகொள்வீர்கள். ஒரு கொள்கையை அமல்படுத்துவது எவ்வளவு கடினம் என்பது அப்போது தான் புரியும். இந்தியா என்பது 140 கோடி மக்களைக் கொண்டது. இங்கு வெவ்வேறு மதங்கள், சாதிகள் மற்றும் மொழிகளைக் கொண்ட மக்கள் உள்ளனர். இதை நிர்வகிப்பது நம்பமுடியாத அளவிற்குச் சவாலானது. அனைவரையும் எப்போதும் மகிழ்விக்க முடியவே முடியாது.

நான் (பத்ம பூஷன் விருது பெற) குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்ற போது அங்கிருந்த புரோட்டோகால், பாதுகாப்பைப் பார்க்கும் போது, ​​தலைவர்கள் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் சுமையைப் புரிந்து கொள்ள முடிகிறது.. அது உண்மையாகவே ஒரு கடினமான வேலை. நாட்டின் அல்லது மாநிலத்தின் பொறுப்பை உங்கள் தோள்களில் சுமப்பது மிகப் பெரியது.

அரசியலுக்கு நோ

நான் எப்போதும் அரசியலுக்கு அப்பால் தான் இருந்துள்ளேன். எனது நெருங்கிய நட்பு வட்டாரத்தில் பேசும்போது கூட அரசியல் குறித்துப் பேச மாட்டேன். இது தெளிவாக நானே எடுத்த முடிவு தான். வரும் காலத்திலும் அது அப்படியே இருக்கும்.. மாநில அரசியலாக இருந்தாலும் தேசிய அரசியலாக இருந்தாலும் எனது நட்பு வட்டாரத்திலேயே அது குறித்து சீக்கிரம் பேச மாட்டேன்.. ராஷ்டிரபதி பவனில் எனக்குக் கிடைத்த அனுபவம், அந்த வேலை எவ்வளவு கனமானது என்பதை எனக்கு உணர்த்தியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+