கால் மரத்து போகுதுங்க.. சட்டென கோர்ட்டில் சொன்ன செந்தில் பாலாஜி.. நீதிபதி கேட்ட கேள்வி.. பரபரப்பு
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை உள்ளிட்ட ஆவணங்களை வழங்கியது. இந்த வழக்கில் நேற்று நேரில் ஆஜரான அமைச்சர் செந்தில் பாலாஜி கோர்ட்டில் சொன்ன சில விஷயங்கள் கவனம் பெற்றுள்ளன.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டம் தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கில் ஜூன் 14ல் கைதான செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆகஸ்ட் 14ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 150 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கை, 3 ஆயிரம் பக்கத்திலான ஆவணங்களை டிரங்கு பெட்டியில் கொண்டு வந்து அமலாக்கத்தையினர் தாக்கல் செய்தனர்.

அவரது நீதிமன்ற காவல் நேற்று முடிவடைந்ததையடுத்து புழல் சிறையிலிருந்து அழைத்துவரப்பட்ட செந்தில்பாலாஜி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ரவி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.
நேற்று கோர்ட்டில் ஆஜரான செந்தில் பாலாஜி மிகவும் கலைந்த முகத்துடன் காணப்பட்டார். கடந்த முறை நீண்ட தாடியுடன் காணப்பட்டவர் இந்த முறை அதை ஷேவ் செய்து இருந்தார். அவர் முன்பை விட எடை குறைந்து ஒல்லியாக காணப்பட்டார். எப்போதும் செந்தில் பாலாஜி சுறுசுறுப்பாக இருக்க கூடியவர்.
செந்தில் பாலாஜி தோற்றம்; ஆனால் நேற்று செந்தில் பாலாஜி ஆள் அடையாளமே தெரியாமல் காணப்பட்டார் . பின்னர், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். நேற்று விசாரணையில் அடுத்த முறை நேரில் ஆஜராக தேவையில்லை, காணொலியில் ஆஜரானால் போதும் என்று கோர்ட் செந்தில் பாலாஜியிடம் தெரிவித்தது.
கால் மரத்து போகுது: நேற்று செந்தில் பாலாஜியின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்று நீதிபதி கேட்டுள்ளார். அதற்கு.. எனக்கு கால் மரத்து போகிறது. சோர்வாக இருக்கிறேன் என்று செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
இதையடுத்து தொடர்ந்து ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக செந்தில்பாலாஜி தரப்பில் நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நீதிபதி ரவி, அமலாக்கத்துறை தொடர்பான வழக்கில் ஜாமீன் கோரிய மனுவை இந்த நீதிமன்றம் விசாரிக்க முடியாது என்பதால், அதற்கான சிறப்பு நீதிமன்றமான சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தினார்.
அமலாக்கத்துறை தாக்கல் செய்த 150 பக்க குற்றபத்திரிகை செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் வழங்கப்பட்டது. அடுத்தமுறை காவல் நீட்டிப்புக்கு நேரில் ஆஜர்படுத்த தேவையில்லை என்றும், காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தினால் போதுமென சிறைத் துறைக்கு நீதிபதி ரவி உத்தரவிட்டுள்ளார்.
வழக்கு பின்னணி: அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை விடுவதாக இல்லை என்றே தோன்றுகிறது. இந்திய வரலாற்றில் அமலாக்கத்துறை மூலம் விசாரிக்கப்பட்டவர்களில் அதிக கண்டிப்புடன் விசாரிக்கப்பட்டவர் செந்தில் பாலாஜிதான் என்று சொல்லும் அளவிற்கு இந்த விசாரணை நடக்கிறது.
அவர் வீட்டில் ரெய்டு நடத்தியது தொடங்கி அவரை கஸ்டடியில் எடுக்க அமலாக்கத்துறை காட்டிய தீவிரம் வரை இதற்கு உதாரணம். இன்னொரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை 5 நாட்கள் விசாரணை செய்தது. அவரிடம் விடாமல் அமலாக்கத்துறை தீவிர விசாரணைகளை மேற்கொண்டது. இந்த விசாரணையின் அறிக்கை ஏற்கனவே கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications