முழு திருப்தியுடன் ஓய்வு பெறுகிறேன்.. சிலை கடத்தல்காரர்களை விழிபிதுங்க வைத்த பொன் மாணிக்கவேல்
Recommended Video

சென்னை: முழு மனதிருப்தியுடன் ஓய்வு பெறுகிறேன் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவி ஐஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்தார்.
தமிழகத்தில் பழங்கால கோயில்களில் ஐம்பொன் சிலைகள் மற்றும் விலைமதிப்புள்ள சிலைகள் கடத்தப்பட்டன. இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் கடத்தல் சிலைகளை வெளிநாடுகளில் இருந்து மீட்டு கொண்டு வந்தார்.
இன்னும் இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் பெரும் தலைகள் சிக்குவர் என எதிர்பார்க்கபட்ட நிலையில் பொன் மாணிக்கவேல் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.

புதியவர் நியமனம்
இவருக்கு பதவி நீட்டிப்பு கிடைக்க வேண்டும் என அனைத்து கட்சியினரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவருக்கு பதிலாக புதிய ஏடிஜிபியை தமிழக அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது.

மதிக்க வேண்டும்
இவர் சென்னை ஐசிஎப்பில் நேற்று அவருக்கு பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. அப்போது அவர் பேசுகையில் சிலைகளை மீட்கும் பணிகளை இளைஞர்களிடம் ஒப்படைக்கிறேன். குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களை மதிக்க வேண்டும்.

சாட்சியாக ஏற்க வேண்டும்
எப்ஐஆர் பதிவு செய்ய போலீஸார் பயப்பட தேவையில்லை. நீதிமன்றத்தின் வழக்கிற்கு மட்டும் பயந்தால் போதும். குற்றம்சாட்டப்பட்டவர்கள் தாங்கள் அளிக்கும் வாக்குமூலத்தை ஒரு காகிதத்தில் காவலர்கள் எழுத வேண்டும். அப்போது மட்டுமே அது சாட்சியாக ஏற்றுக் கொள்ளப்படும்.

மன நிறைவு
போலீஸாருக்கு பெரும் கடமை இருக்கிறது. அதை உணர்ந்து அனைவரும் செயல்பட வேண்டும். முழு மன நிறைவுடன் ஓய்வு பெறுகிறேன் என்றார்.

கடைசி நாளிலும் செம ஸ்பீட்
இன்று பணி நிறைவு நாள் என்றாலும் கூட தனது வழக்கமான வேகத்தை கொஞ்சம் கூட குறைக்கவில்லை பொன் மாணிக்கவேல். அதே உற்சாகம், அதே வேகம், அதே அதிரடியுடன் படு சுறுசுறுப்பாக தனது பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறார் பொன் மாணிக்கவேல்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications