அய்யோ மோடியை பற்றி தப்பா பேசிட்டேன்! வார்த்தையை வாபஸ் பெற்ற சசிதரூர்! காங்கிரசுக்கு புதிய சிக்கல்
சென்னை: இஸ்லாமிய நாடுகளுடன் பிரதமர் மோடிக்கு இருக்கும் உறவு இதுவரை இல்லாத சிறந்த முன்னுதாரணமாகும். இதனால் பிரதமர் மோடியை விமர்சித்த வார்த்தைகளை மகிழ்வோடு திரும்ப பெற்றுகொள்கிறேன் என காங்கிரஸ் எம்பி சசிதரூர் பரபரப்பாக பேசியுள்ளார். பிரதமர் மோடியை வீழ்த்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விவாதித்து வரும் நிலையில் சசிதரூரின் இந்த பேச்சு தொடர்பான வீடியோ வேகமாக பரவி வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் சசிதரூர். கேரளாவை சேர்ந்த இவர் திருவனந்தபுரம் எம்பியாக உள்ளார். கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு தேசிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆதரவுடன் மல்லிகார்ஜூன கார்கே களமிறங்கிய நிலையில் அவரை எதிர்த்து சசிதரூர் போட்டியிட்டார்.

இறுதியில் அந்த தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்ற நிலையில் சசிதரூர் தோல்வியடைந்தார். இதனால் காங்கிரஸ் தலைவராகும் வாய்ப்பு சசிதரூரை விட்டு சென்றது. சசிதரூரின் தோல்விக்கு முக்கிய காரணம் என்னவெனில் அவர் தான்.
ஏனென்றால் ஏதேனும் ஒரு காங்கிரஸ் கட்சி ஒரு நிலைப்பாடு எடுத்தால் அதனை வேறு கோணத்தில் பார்த்து கருத்து கூறியும் சர்ச்சையை கிளப்புபவர் தான் இந்த சசிதரூர். இதனால் தான் அவருக்கு பெரிய அளவில் காங்கிரஸ் கட்சியின தலைவர் தேர்தலில் ஆதரவு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
மேலும் சசிதரூர் சமூக வலைதளங்களில் இவர் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கிறார். ஆங்கிலத்தில் சிறந்த புலமை கொண்டுள்ள சசிதரூருக்கு கட்சிகளை கடந்த ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனால் தனது ரசிகர்களை குஷிப்படுத்தும் நோக்கில் அவர் வேடிக்கையாக கூறும் விஷயங்கள் பல நேரங்களில் விவாதத்தை கிளப்பி விடும்.
இந்நிலையில் தான் தற்போது ட்விட்டரில் சசிதரூர் பேசும் வீடியோ ஒன்று டிரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவில் சசிதரூர், ‛‛மோடி பிரதமராக பொறுப்பேற்ற முதல் ஆண்டில் 27 நாடுகளுக்கு சென்றார். அதில் ஒன்று கூட இஸ்லாமிய நாடாக இல்லை. காங்கிரஸ் எம்பியாக இருந்த நான் விமர்சனம் செய்தேன். ஆனால் அதற்கு பிறகு அவர் செய்ததை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்.
மேலும் இஸ்லாமிய நாடுகளுடனா உறவு சிறந்த முன்னுதாரணத்துக்கு சான்றாகும். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இதற்கு முன்பு கூட இப்படி ஒரு சூழல் இருந்திருக்க முடியாது. ஏனென்றால் முக்கியமான முஸ்லிம் நாடுகளுடன் நமது உறவு சிறப்பானதாக அமைந்தது இல்லை. இதனால் எனது தொடக்ககால விமர்சனத்தை திரும்ப பெறுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் " என பேசியுள்ளார்.

இந்த வீடியோ தான் தற்போது ட்விட்டர் உள்ளிட்ட வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி மற்றும் பாஜகவை வீழ்த்தும் நோக்கத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இன்று கூட பெங்களூரில் 2வது நாளாக சோனியா காந்தி தலைமையில் 26 கட்சி தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்து வரும் நிலையில் சசிதரூரின் இந்த வீடியோ விவாதத்தை கிளப்பி உள்ளது. மேலும் சசிதரூரின் இந்த பேச்சு காங்கிரஸ் கட்சிக்கு சிரமத்தையும் ஏற்படுத்தலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே தான் சசிதரூரின் இந்த பேச்சு தொடர்பான வீடியோவை பாஜகவின் ஐடி விங்க் பொறுப்பாளர் அமித்மாளவியா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ‛‛இஸ்லாமிய நாடுகளுடன் பிரதமர் மோடியின் உறவு என்பது முன்னுதாரணமாக உள்ளது. இதற்கு முன்பு கூட இந்த உறவு இப்படி சிறப்பானதாக இருந்திருக்க முடியாது. ஆனால் இப்போது சிறப்பாக உள்ளது. குறிப்பாக அரபு நாடுகளுடன் நல்ல உறவு உள்ளது என சசிதரூர் இறுதியாக உண்மையை பேசியுள்ளார்'' என பகிர்ந்துள்ளார்.
-
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications