நான் அந்த மாதிரி ஆள் இல்லை.. வருத்தம் தெரிவித்து புதிய வீடியோ வெளியிட்ட யூடியூபர் இர்ஃபான்
சென்னை: நான் செய்தது தவறு தான் என யூடியூபர் இர்ஃபான் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இல்லாதவர்களை பார்த்து சிரிக்கும் ஆள் நான் இல்லை எனவும், இது குறித்து அன்றே நான் பேசியிருந்தால் தவறாக சென்றிருக்கும் எனவும் இர்ஃபான் விளக்கம் அளித்துள்ளார். ரம்ஜான் பண்டிகையையொட்டி, மனைவியுடன் சேர்ந்து ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கும் போது அவர்களை தவறாக பேசியதாக விமர்சனம் எழுந்த நிலையில் விளக்கமளித்துள்ளார். ஏற்கனவே அவர் இதற்கு மன்னிப்பு கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல யூடியுபர் இர்ஃபான். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும் இர்ஃபான் ரம்ஜான் பண்டிகையின் போது மக்களுக்கு உதவி அளிக்க சென்ற போது அவர் நடந்து கொண்ட விதம் விமர்சனத்திற்கு உள்ளானது. அதாவது, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தனது காரில் மனைவியுடன் சென்ற இர்ஃபான் காரில் இருந்து கொண்டே சாலையோரம் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு உணவு, உடைகள், பணம் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

சர்ச்சையில் சிக்கிய இர்ஃபான்
அப்போது, மக்கள் உதவி பொருட்களை வாங்க முயற்சித்த போது, கோபமான இர்ஃபான், "ஏன் இப்படி இருக்கிறீர்கள்? உங்களுக்கு கொடுக்கத்தானே வந்திருக்கிறோம் என கோபமாக பேசினார். இதை அப்படியே தனது யூட்யூப் சேனலில் எடிட் செய்யாமல் வெளியிட்டிருந்தார். ஈகைத் திருநாளில் ஈகை செய்வதை இஸ்லாமிய பெருமக்கள் மிக முக்கியமாக கருதும் வேளையில், இர்ஃபானின் இந்த செயல் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.
சமூக வலைத்தளங்களில் பலரும் இர்ஃபானின் செயலை விமர்சித்து இருந்தனர். ரம்ஜான் பண்டிகை முடிந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், தனது செயலுக்கு இர்ஃபான் வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இர்ஃபான் வெளியிட்ட வீடியோவில் இர்ஃபான் கூறியதாவது:-
அந்த மாதிரி ஆள் இல்லை
ரம்ஜான் அன்று வெளியிட்ட வீடியோவை பார்த்து இருப்பீர்கள். நான் அதைப்போல பண்ணியிருக்க கூடாது. அத்தகைய செயல் தவறானது. கொடுக்க (உதவி) போன இடத்தில் அந்த மாதிரி பேசியிருக்க கூடாது. ரியாக்ட் பண்ணியிருக்க கூடாது. நான் சிரிக்கிறேன் என்று சிலர் சொன்னார்கள். நான் அந்த மாதிரி ஆள் இல்லை.
யாருமே அப்படி இருக்க மாட்டார்கள். படத்தில் வில்லன்கள் தான் ஏழையாக இருப்பவர்களை பார்த்து சிரிப்பார்கள். இல்லாத மக்களை பார்த்து யாருமே சிரிக்க மாட்டார்கள். அப்படி ஒரு ஆள் உலகத்தில் இருக்கிறார் என்று தெரியவில்லை. நான் அப்படி சிரிப்பவன் இல்லை. இல்லாதவர்களை பார்த்து நான் சிரித்தது போல சித்தரிக்கிறார்கள்.
அதுங்க, இதுங்க என நான் கூப்பிடவில்லை
அந்த மாதிரி ஆள் நான் இல்லை. அதுபோக அங்கே இருந்தவர்களை அதுங்க இதுங்க என்று கூப்பிட்டேன் என்று சொல்கிறார்கள். நான் அப்படி சொன்னது அங்கே இருந்த சிறுவர்களைத்தான். எங்கள் வீட்டில் சின்ன பசங்களை உரிமையாக அப்படித்தான் கூப்பிடுவோம். என்னுடைய வீடியோவை பார்த்து இருந்தால் உங்களுக்கு தெரியும். கண்டிப்பாக அப்படி சொல்லியிருப்பேன். தேடி காட்டி நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டிலேயே அப்படித்தான் பேசி பழக்கம். இவ்வாறு அவர் கூறினார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications