நான் பாஜகவில் சேர தயார்.. சவால் விட்ட உதயநிதி? ஏன் தெரியுமா?
பாஜகவில் சேருவது குறித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் செய்திருக்கும் டிவிட் பெரிய வைரலாகி உள்ளது.
சென்னை: பாஜகவில் சேருவது குறித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் செய்திருக்கும் டிவிட் பெரிய வைரலாகி உள்ளது.
நடிகர் உதயநிதி ஸ்டாலின் டிவிட்டரில் போஸ்டுகள் எல்லாம் மிகவும் வைரலாகி வருகிறது. முக்கியமாக திமுகவில் அவர் இருப்பது தொடர்பாகவும், கட்சியில் அவரின் பொறுப்பு தொடர்பாகவும் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர் பதில் அளிப்பது பெரிய வைரலாகி உள்ளது.
இந்த நிலையில் குடும்ப அரசியல் குறித்து வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
|
என்ன பிரச்சனை
பாஜக இளைஞரணியின் தமிழக துணைத்தலைவர் எஸ்.ஜி சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் பிரியங்கா காந்தி காங்கிரசில் பதவி பெற்றது குறித்து டிவிட் செய்து இருந்தார். அதில் ''திமுகவினர் ராகுல் காந்தியும், பிரியங்காவும், மோடியும், கனிமொழியும் பதவி பெறுவதை பற்றி பேசுவதே இல்ல. குடும்பம் அரசியல் குறித்து திமுகவினர் பேசுவது இல்லை. அவர்களை தமிழிசையுடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள். தமிழிசை குடும்பம் மூலமாக வளர்ந்தவர் கிடையாது. அவர் தனது 15 வருடம் சொந்தமாக கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்துள்ளார்.. குடும்ப அரசியலால் முன்னேறியவர் கிடையாது'' என்று கூறினார்.
|
உதயநிதி பதவி
அதேபோல், உதயநிதிக்கு திமுகவில் டிரஸ்டி பதவி அளிக்கப்பட்டு இருக்கிறது. திமுகவின் கோடி கோடியான பணங்களை கட்டுப்படுத்தும் பதவி அது. இதையும் திமுகவினர் சரி என்று கூறுவார்கள். உதயநிதியையும் தமிழிசை மற்றும் நிர்மலாவுடன் ஒப்பிட்டு பேசுவார்கள், என்று கிண்டலாக எஸ்.ஜி சூர்யா குறிப்பிட்டார்.
|
உதயநிதி பதில்
இதற்கு தற்போது உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அதில், ''நீங்கள் சொல்வதை உங்களால் நிரூபிக்க முடியுமா.. உங்களால் முடிந்தால் நான் பாஜகவில் சேர தயார்... அதுதான் எனக்கு அளிக்கப்பட கூடிய மோசமான தண்டனையாக இருக்கும்'' என்று கிண்டலாக பதில் கூறியுள்ளார்.
|
டிவிட் வைரல்
உதயநிதியின் இந்த டிவிட் பெரிய வைரலாகி உள்ளது. 1500 பேர் இதை லைக் செய்து இருக்கிறார்கள். 500 பேர் வரை இதை ரீடிவிட் செய்துள்ளனர். இவர் ''சந்தானம் கூட சேர்ந்து டயமிங் காமெடியல பிண்றீங்க போங்க'' என்று உதயநிதியை பாராட்டியுள்ளார்.
-
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications