ஆ.ராசா உடன் விவாதிக்க நான் தயார்... வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றுவேன் - ராஜேந்திரபாலாஜி
எடப்பாடியாரைப் பற்றி பேச ஆ.ராசாவுக்கு என்ன யோக்கியதை உள்ளது? ஜெயலலிதாவையோ, எடப்பாடியாரையோ பற்றி பேச ஸ்டாலினுக்கோ, ஆ.ராசவுக்கோ தகுதியில்லை என்று ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.
சென்னை: 2ஜி குறித்து விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். கோட்டையில் வைத்து நேருக்கு நேர் விவாதிக்க முதலமைச்சர் தயாரா என்று கேட்ட அ.ராசாவிற்கு தமிழக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பதில் கொடுத்துள்ளார். ஆ.ராசா விவாதத்துக்கு அழைத்தால் எடப்பாடியார் எதற்கு வர வேண்டும்? நான் வருகிறேன் திமுக தயாரா என்று கேட்டுள்ளார் அ.ராசா.
Recommended Video
2ஜி வழக்கில் சிக்கி சிறை சென்று பின்னர் விடுதலையான திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா முதல்வரின் விமர்சனத்துக்கு பதில் அளித்தார். 2ஜி குறித்து விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். கோட்டையில் வைத்து நேருக்கு நேர் விவாதிக்க முதலமைச்சர் தயாரா? அட்டார்னி ஜெனரல் உட்பட யாரை வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளட்டும். நான் தயாராக இருக்கிறேன் சவால் விட்டார்

இதன் பின்னர் அதிமுகவிலிருந்து பதில் வராத நிலையில் ஆ.ராசா மீண்டும் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் மீண்டும் விவாதம் நடத்த தயார் என்று அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விவாதத்துக்கு நான் தயார் என்று கூறியுள்ளார். விருதுநகரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திர பாலாஜி, 2ஜியில் ஊழல் செய்த பணத்தைப் பதுக்கி வைத்துள்ளார் ஆ.ராசா. அதனால்தான் ராசாவை கூடவே வைத்துள்ளார் ஸ்டாலின்.
ஆ.ராசா விவாதத்துக்கு அழைத்தால் எடப்பாடியார் எதற்கு வர வேண்டும்? நான் வருகிறேன். திமுக தயாரா?" என்று கேள்வி எழுப்பிய ராஜேந்திர பாலாஜி உங்க வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றுவேன் என்று சொன்னார்.
எடப்பாடியாரைப் பற்றி பேச ஆ.ராசாவுக்கு என்ன யோக்கியதை உள்ளது? ஜெயலலிதாவையோ, எடப்பாடியாரையோ பற்றி பேச ஸ்டாலினுக்கோ, ஆ.ராசவுக்கோ தகுதியில்லை.
பொறாமையுடன் எப்படியாவது அவதூறு பரப்பி ஆட்சியைக் கைப்பற்றி விடலாம் என கனவு காணும் ஸ்டாலினுக்கு வரும் தேர்தலில் பொதுமக்கள் சம்மட்டி அடி கொடுப்பார்கள் என்றும் கூறினார். கருணாநிதி பேரன், ஸ்டாலினின் மகன் என்பதால் மட்டுமே உதயநிதியை முன் வைக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார் ராஜேந்திர பாலாஜி.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications