இடதுகை வலதுகை.. யாரா இருந்தாலும் வாங்க.. "புக்ஸ்" இருக்கு.. விசிகவிற்கு பளீர் சவால்விட்ட அண்ணாமலை!
சென்னை: விசிக எம்பி தொல் திருமாவளவனுடைய இடதுகை வலதுகை அனைவரும் பாஜக அலுவலகத்துக்கு வந்து அவர்கள் விரும்பும் புத்தகங்களை 26 ம் தேதி மதியம் 12 மணிக்கு கொடுக்கலாம் என்று பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டு இருக்கிறார்.
ப்ளூ கிராப் டிஜிட்டல் பவுண்டேசன் நிறுவனம் மூலம் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். இதில் பிரதமர் மோடியை இளையராஜா பாராட்டி பேசி இருந்தார்.
அதில், மோடி ஆட்சியின் செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார் என்று பாராட்டி இருந்தார். அதோடு மோடி பற்றி பேசிய கருத்துக்களை வாபஸ் வாங்க மாட்டேன் என்று இளையராஜா குறிப்பிட்டு இருந்தார்.

இளையராஜா
இளையராஜா கருத்துக்கு பாஜக தலைவர்கள் பலர் வரவேற்பு கொடுத்து இருந்தனர். இது பற்றி பேசிய பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடியை இளையராஜா அம்பேத்கருடன் ஒப்பிட்டதில் தவறு இல்லை. நான் இதுவரை 2000 புத்தகங்கள் படித்துள்ளேன். அருந்ததியர் மக்களுக்கு மோடி பல நலத்திட்டங்களை செய்துள்ளார். ஆர்எஸ்எஸ் குறித்து அம்பேத்கர் கூறிய கருத்து தொடர்பாக என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க திருமாவளவன் தயாரா என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

அண்ணாமலை சவால்
அண்ணாமலை விடுத்த இந்த சவாலுக்கு பதில் அளித்த எம்பி திருமாவளவன், மோடி ஏழைகளுக்கும், நடுத்தர மக்களுக்கும் என்ன செய்தார். அவர் அம்பானி, அதானிகளுக்கு மட்டும் நல்லது செய்துள்ளார். விளையாட்டில் ஜூனியர், சப் ஜூனியர் என்று சொல்வார்கள். அதேபோல் அண்ணாமலை அரசியலில் சப் ஜூனியர் . அவருடன் பேச என் கட்சியில் இருந்து சப்-ஜூனியரை வேண்டுமென்றால் அனுப்புகிறோம் என்று கூறினார்.

விசிக பதிலடி
இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகி சங்கத்தமிழன் அண்ணாமலையுடன் விவாதிக்க தான் தயார் என்று கூறினார். அதோடு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசும் போது சட்டென அண்ணாமலைக்கு போனை போட்ட சங்கத்தமிழன், 24ம் தேதி விவாதம் செய்ய நான் தயார். நீங்கள் தயாரா என்று கேட்டார். அதற்கு அண்ணாமலை, 24ம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா வருவதால் பிசியாக இருப்பேன்.

திருமாவளவன் சவால்
அதனால் 26ம் தேதி சந்திக்கலாம் என்று போனில் குறிப்பிட்டார். இதற்கு சங்கத்தமிழன் , அம்பேத்கரின் தொகுப்பு நம்பர் 8 என்ற புத்தகத்தை படித்து வைத்திருங்கள் என்று பதிலுக்கு கூறினார்.அண்ணாமலையோ, இந்துத்துவா அம்பேத்கர் நான் படித்துள்ளேன் உங்களுக்கு தருகிறேன் என்று பதிலுக்கு சவால் விட்டார். இந்த சம்பவம் பெரிய அளவில் விவாதம் ஆன நிலையில்தான் தற்போது அண்ணாமலை இது குறித்து புதிய சவால் ஒன்றை விடுத்துள்ளார்.

பதிலடி
அதில், தொல் திருமாவளவன் அவர்களுடைய இடதுகை வலதுகை அனைவரும் நம்முடைய அலுவலகத்துக்கு வந்து அவர்கள் விரும்பும் புத்தகங்களை 26 ம் தேதி மதியம் 12 மணிக்கு கொடுக்கலாம். நம் அலுவலகத்தில் தயாராக இருக்கக்கூடிய புத்தகங்களையும் வாங்கி செல்லலாம். அதன் பின்பு அண்ணன் தொல் திருமாவளவனிடம் நேரத்தையும், தேதியும் அவர்கள் கூட்டாக அமர்ந்து முடிவு செய்து சொல்லட்டும், தயாராக சொல்லும் இடத்திற்கு வருகின்றேன்.
Recommended Video

என்ன சொன்னார் ?
அனைத்து விடுதலை சிறுத்தை கட்சியின் சகோதர சகோதரிகளை நமது பாஜக அலுவலகத்திற்கு 26 ஆம் தேதி வரவேற்கின்றேன், உங்களிடம் புத்தகம் இருந்தால் கொடுப்பதற்கு. தலைப்பு: அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய சித்தாந்தத்தை முழுமையாக பின்பற்ற கூடிய தலைவர் பாரத பிரதமர் மோடி அவர்கள், என்று அண்ணாமலை சவால் விட்டுள்ளார். விசிக - பாஜக இடையிலான இந்த சவால் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
அரசு பள்ளி முட்டை.. ₹3.70க்கு வாங்கி ₹5.63 விற்பனை. விஜய்க்கு அண்ணாமலை வைத்த கோரிக்கை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications