Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

42 ஆண்டுகளாகியும் கோபம் தீரல.. சென்னை ஸ்டேடியத்தில் ரகளை செய்து சேர்களை பறக்கவிட்டோம்: பாஜக நாராயணன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு வெற்றி பெற்றிருக்க வேண்டிய ரஞ்சி கோப்பை போட்டியில் நடுவர்களின் 'மோசடியால்' டெல்லி வெற்றி பெற்றதை நினைத்து, நினைத்து 42 ஆண்டுகளாகியும் இன்றளவும் என் கோபம் தீராமல் உள்ளது என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் 'சி' பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு, கர்நாடக அணிகள் மோதும் ரஞ்சி கோப்பை 2024 டெஸ்ட் போட்டி நாளை 9ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள இந்த ரஞ்சி கோப்பை போட்டியை பார்வையாளர்கள் இலவசமாக பார்க்க அனுமதி வழங்கப்படுவதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

I am still angry even after 42 years: BJP Narayanan reminds Ranji trophy match

இந்நிலையில், தான் நேரில் கண்ட ரஞ்சி கோப்பை போட்டி நினைவுகள் பற்றி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி. அவர் வெளியிட்டுள்ள பதிவு பின்வருமாறு:

"சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், வரும் 9ஆம் தேதி (நாளை) முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும் தமிழ்நாடு, கர்நாடக அணிகள் இடையிலான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியை இலவசமாக பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்தியாவின் மிக முக்கிய கோப்பைகளில் முதன்மையான இந்த போட்டியை காண கிரிக்கெட் ஆர்வலர்கள் அதிக அளவில் செல்ல வேண்டும்.

1982, பிப்ரவரி 25ம் தேதியன்று தமிழ்நாடு - டில்லி அணிகளுக்கு இடையிலான காலிறுதி போட்டி சென்னையில் இதே சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது பசுமரத்தாணி போல் என் நினைவில் பதிந்திருக்கிறது. அந்த போட்டியில் சென்னை ரசிகர்களின் கிரிக்கெட் ஆர்வம் மிக சிறந்து விளங்கியதை மறக்க முடியாது. வெங்கட்ராகவன் தலைமையில் ஸ்ரீகாந்த், டி.ஈ.ஸ்ரீனிவாசன், வி.சிவராமகிருஷ்ணன் எம்.ஓ.பார்த்தசாரதி, பி.விஜயகுமார், மோசஸ், ஜப்பார்எ, ஸ்.வாசுதேவன், பரத் ரெட்டி உள்ளிட்டோரோடு தன் கிரிக்கெட் வாழ்வின் துவக்கத்தை அந்த போட்டியில் தான் எல்.சிவராமகிருஷ்ணன் துவக்கியதோடு, தன் மிகச் சிறந்த பந்து வீச்சினால் டில்லி அணியை திணறடித்தது இன்னும் நினைவில் உள்ளது.

மொஹிந்தர் அமர்நாத் தலைமையிலான டில்லி அணியில் சேத்தன் சவுகான், லம்பா, கீர்த்தி ஆசாத், மதன்லால், மனீந்தர் சிங் சுரீந்தர் அமர்நாத் போன்ற வீரர்கள் இடம் பெற்றிருந்த நிலையில், இந்தப் போட்டி பெரும் பரபரப்பாக இருந்தது. முதல் இன்னிங்சில் வெங்கட்ராகவன் 7 விக்கெட்டுகளை வீழ்த்த, இரண்டாவது இன்னிங்சில் எல்.சிவராமகிருஷ்ணன் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பரபரப்பான இந்த போட்டியில் உறுதியாக தமிழ்நாடு வெற்றி பெற்றிருக்க வேண்டிய நிலையில், நடுவர்களின் 'மோசடியால்' டில்லி வெற்றி பெற்றதை நினைத்து, நினைத்து 42 ஆண்டுகளாகியும் இன்றளவும் என் கோபம் தீராது உள்ளது.

முதல் இன்னிங்சில் டி.இ.ஸ்ரீநிவாசன் சந்தித்த இரண்டாவது நாளின் கடைசி பந்தில் மட்டையில் படாது சென்ற பந்தை பிடித்து விட்டதாக அவுட் கொடுத்த நடுவரின் தீர்ப்பு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மைதானத்தில் சென்னை ரசிகர்கள் புகுந்து கடும் ரகளையில் ஈடுபட்டனர். (நான் உட்பட). நான்காவது நாள் எஸ்.வாசுதேவன் மறுபடியும் அதே போன்ற தவறான, மோசடி அவுட் கொடுக்கப்பட்ட போது, மீண்டும் நான் உட்பட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டது சென்னை ரசிகர்களின் கிரிக்கெட் மோகத்தை வெளிப்படுத்தியது. அன்றைய தினம் சேப்பாக்கத்தில் இருந்த சேர்கள் மைதானத்தில் கிரிக்கெட் பந்துகளை போல் பறந்தன.

'D' ஸ்டாண்டில் இருந்த பெஞ்சு பலகைகள் உடைத்தெறியப்பட்டு வீசப்பட்டன. பெருமளவில் காவல்துறையினர் வந்த பின்னரே அமைதி திரும்பியது. அந்த போட்டியை காண வந்திருந்த 'துக்ளக்' சோ அவர்கள் மற்றும் சில முக்கியஸ்தர்கள், வெங்கட்ராகவன் போன்றோர் மைதானத்தி சுற்றி வந்து ரசிகர்களை அமைதிப்படுத்தி, தமிழகம் வெல்லும் என ஆறுதல் கூறினார். ஆனாலும், நடுவர்களின் தவறால், மோசடியால் அன்று தமிழகம் தோற்றது. டில்லி வென்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியில் மொஹிந்தர் அமர்நாத், சவுகான் போன்றோர் நினைத்திருந்தால் உண்மை வென்றிருக்கும். நீதி நிலைநாட்டப்பட்டிருக்கும். ஆனால், அவர்கள் உண்மையின் பக்கம் நிற்கவில்லை. மைதானத்திலிருந்து பலர் அழுதபடியே வெளியேறியது சோகம்.

அடுத்த துக்ளக் இதழில் சோ அவர்கள் இது குறித்து காட்டமாக விமர்சித்து எழுதியிருந்தார். சென்னை ரசிகர்கள் மிகச் சிறந்தவர்கள். ஆனால், அன்று இருந்த ஆர்வம் இன்று குறைந்துள்ளது. ஆகையால் வருகின்ற 9ம் தேதி நடைபெறும் போட்டிக்கு அதிக அளவில் சென்று தமிழக வீரர்களை ஊக்குவிக்க வேண்டுகிறேன். நீண்ட கால நினைவுகளை பகிர்ந்து கொள்வதற்கு இன்று ஒரு வாய்ப்பு கிடைத்தது." என நாராயணன் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+