"ஆட்டோவில் சட்டசபை வருவேன்".. விஜயை திரும்பி பார்க்க வைத்த தவெக எம்எல்ஏ

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக ஆட்சியமைத்து 3 மாதங்கள் நிறைவடைந்துவிட்டது. சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.. பட்ஜெட் பற்றிய கருத்துகளை கடந்து தவெக, திமுக இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. பல்வேறு சுவராஸ்யமான விவாதங்களும் நடக்கின்றன. சொந்தமாக வண்டி இல்லாததால் சட்டமன்றத்துக்கு வருவதற்கு வாகனம், உடன் பணியாற்ற உதவியாளர் வசதி செய்து கொடுக்குமாறு எம்எல்ஏ ஜோதிமணி கோரிக்கை வைத்தார். அவரின் கோரிக்கையை ஏற்று, எம்எல்ஏக்களுக்கு கார் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இந்நிலையில் சட்டமன்றத்துக்கு ஆட்டோவில் வருவதால் ஏற்பட்ட அனுபவத்துடன் ஒப்பிட்டு தவெக எம்எல்ஏ பேசினார். அமைதியாக இருந்த விஜயே ஒரு சட்டென திரும்பி அவரின் பேச்சை பார்த்து ரசித்தார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் தவெக எம்எல்ஏ சபரி ஐயங்கரன் சட்டமன்றத்தில் பேசுகையில், "முதல்முறையாக வெற்றி பெற்று சட்டமன்றம் வந்துள்ள எம்எல்ஏக்களுக்கு கார் வழங்கப்படும் என்கிற முதலமைச்சர் விஜய் அறிவிப்புக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நான் கல்லூரி படிக்கும்போது காதல் தோல்வி ஏற்பட்டது. வேலையும் இல்லை, காரும் இல்லை. இன்றைக்கு தலைவர் எனக்கு வேலையும் கொடுத்து, காரும் கொடுத்துள்ளார். அவருக்கு நான் மிகுந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

i-came-to-assembly-by-auto-vijay-reaction-on-tvk-mla-speech-on-viral

சட்டென திரும்பிய விஜய்

என்னுடைய தொகுதியில் இருந்து நான் தினசரி டிரெய்னில் தான் சென்னை வருகிறேன். எம்எல்ஏ ஹாஸ்டலில் இருந்து கார் மூலம் தான் சட்டமன்றம் வருகிறேன். ஒவ்வொருமுறையும் காவல் பணியாளர்கள் எல்லாம், நீங்கள் யார் என கேட்பார்கள். எம்எல்ஏ என்று சொல்லி, நான் என்னுடைய எம்எல்ஏ ஐடி கார்டை எடுத்து காண்பித்தாலும் நம்ப மாட்டார்கள். இன்றைக்கு 2 விஷயத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளேன்.

இன்று மக்கள் பசியை போக்கும் விவசாயியும் மகிழ்ச்சியுடன் உள்ளனர். மக்கள் பிரதிநிதியான எம்எல்ஏக்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். எல்லாரின் வாயிலாகவும் நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்" என்றார். சபரி பேசும்போது முதலமைச்சர் விஜய் சட்டென திரும்பி அவரின் பேச்சை உற்று கவனித்தார். அனைவரும் சிரித்தபடி அவரின் பேச்சை ரசித்தனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இனோவா காராக

முன்னதாக மற்றொரு தவெக எம்எல்ஏ பேசுகையில், "எல்லாருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் முதலமைச்சர். நியாயமான கோரிக்கையாக இருந்தால் உடனடியாக நிறைவேற்றப்படும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். அறம், நேர்மை, மக்கள் நலம் ஆகியவற்றை தாங்கி பிடிக்கும் முதலமைச்சர் நமக்கு கிடைத்துள்ளார். கொடுக்கிற காரை இனோவா காராக கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று பின்னால் அமர்ந்துள்ள உறுப்பினர்கள் கேட்கிறார்கள்" என்றார். அவரின் பேச்சை கேட்டு விஜய் உள்ளிட்ட அனைவரும் சிரித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+