"2 நாட்கள் நினைச்சு நினைச்சு தூங்காம அழுதேன்".. செங்கோட்டையன் உருக்கம்!
சென்னை: "நான்தான் எடப்பாடி பழனிசாமியை ஜெயலலிதாவுக்கு அறிமுகப்படுத்தினேன். நான் வளர்த்த ஒருவரே என்னை நீக்கியதை நினைத்து 2 நாட்கள் தூங்காமல் அழுதேன்." என தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னம் ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம். விசில் சின்னத்தை பிரபலப்படுத்தும் வேலைகளில் தவெக கட்டியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "திமுகவில் நான் சேரப்போவதாக பரவிய தகவல்களில் உண்மை இல்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எதிர்த்த தி.மு.கவில் நான் சேர்வது என்பது ஒருபோதும் நடக்காது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை போன்று ஒரு நல்ல தலைவராக விஜய் இருக்கிறார். அதனால்தான் த.வெ.க எனக்கு சிறந்த தேர்வாக இருந்தது. விஜய்க்கு 34 சதவீத வாக்குகள் இருக்கிறது.
தவெகவை திமுகவின் 'பி' டீம் என்று சொல்வதில் அர்த்தமில்லை. ஈரோடு மக்கள் சந்திப்பில் திமுகவை தீய சக்தி என்று விஜய் பிரகடனப்படுத்தி இருக்கிறார். விஜய் கொள்கை பற்றி கேட்கிறவர்களுக்கு, காஞ்சிபுரத்தில் விஜய் அறிவித்த திட்டங்களே பதில் சொல்லும். எனது அரசியல் பயணம் குறித்து கூற வேண்டுமானால் கூவத்தூர் நிகழ்வின்போது சசிகலா என்னை தனிப்பட்ட முறையில் அழைத்து முதலமைச்சர் பதவியை ஏற்க சொன்னார். ஆனால் அதை மறுத்து விட்டேன்.
அதிமுகவை ஒன்றிணைக்கவே முன்பு பாஜகவிடம் பேசினேன். ஆனால் என் முயற்சி தோல்வி அடைந்துவிட்டது. நான்தான் எடப்பாடி பழனிசாமியை ஜெயலலிதாவுக்கு அறிமுகப்படுத்தினேன். நான் வளர்த்த ஒருவரே என்னை நீக்கியதை நினைத்து 2 நாட்கள் தூங்காமல் அழுதேன். நான் எந்த தவறும் செய்யவில்லை. காங்கிரஸ் இரண்டு முகமாக பிரிந்துள்ளது. அவர்கள் எந்த வழியில் செல்வார்கள் என்பதை கணிப்பது கடினமாக இருக்கிறது. ஒரு பிரிவினர் எங்களுடன் கூட்டணி வைக்க விரும்புகிறார்கள். எங்களுடன் பேசி வருகிறார்கள்" என்று தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் விவகாரம், 100 நாள் வேலை திட்டத் திருத்தம் உள்ளிட்டவற்றுக்கு கருத்து கூறாததால் பாஜக உடன் கூட்டணி அமைக்க விஜய் திட்டமிட்டுள்ளாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த செங்கோட்டையன், தவெகவின் கொள்கை எதிரி பாஜக என்பதில் விஜய் தெளிவாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். பாஜக - அதிமுக கூட்டணியில் தவெக இணையாது என்பதை உறுதிப்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு, அது தலைவர்களின் மனநிலையைப் பொறுத்தது என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
நள்ளிரவு சர்ப்ரைஸ் ரெய்டு விட்ட அமைச்சர்.. கோவை அரசு மருத்துவமனையில் ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications