திமுக, காங்கிரஸ் ஜாதகத்தை பார்த்தேன்.. என்ன சொல்லுது தெரியுமா?.. எச்.ராஜா கணிப்பு!
திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு ஜாதகம் பார்த்ததாக பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா பேட்டியளித்து இருக்கிறார்.
சென்னை: திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு ஜாதகம் பார்த்ததாக பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா பேட்டியளித்து இருக்கிறார்.
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அடிக்கடி சர்ச்சையாக பேசி வைரலாவது வழக்கம். எதையாவது டிவிட்டரில் எழுதிவிட்டு இதை அடியேன் போஸ்ட் செய்யவில்லை, அட்மீன் போஸ்ட் செய்துவிட்டார் என்று கூறி எஸ்கேப் ஆவதை வழக்கமாக வைத்து இருப்பார்.

சென்னை ஹைகோர்ட்டை தவறாக பேசி, பின் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட கதையும் நடந்தது. இந்த நிலையில்தான் தற்போது எச்.ராஜா பாஜக சார்பாக லோக்சபா தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார்.
சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளராக எச்.ராஜா நிறுத்தப்பட்டு உள்ளார். இந்த நிலையில் சென்னையில் பேட்டி அளித்த எச்.ராஜா ஜாதகம் குறித்து பேசியுள்ளார்.
அதில், திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு ஜாதகம் பார்த்தேன். ஜோசியர்களிடம் கொடுத்து ஜாதகம் பார்த்தேன். இந்த கூட்டணிக்கு கொஞ்சம் கூட வெற்றி வாய்ப்பு கிடையாது. இவர்களில் தேர்தலில் வெற்றிபெற சிறிய வாய்ப்பு கூட கிடையாது.
ஜோசியர்கள் இதைத்தான் சொல்கிறார்கள். அதனால் பாஜக - அதிமுக கூட்டணிதான் தமிழகத்தில் வெற்றிபெறும், என்று எச்.ராஜா கூறியுள்ளார். எச்.ராஜா ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலினின் ஜாதகத்தின்படி அவரால் முதல்வராகவே முடியாது என்று குறிப்பிட்டு இருந்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications