"மோடியை எங்க குடும்பத்திற்கே பிடிக்கும்" பாஜகவில் சேர்ந்து விட்டேனா? நடிகர் அர்ஜூன் விளக்கம்
சென்னை: பிரதமர் மோடியை அர்ஜூன் இன்று சந்தித்து பேசிய நிலையில், அவர் பாஜகவில் சேரப்போவதாக தகவல் வெளியானது. இது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு அர்ஜூன் பிரதமர் மோடியை சந்தித்து ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளர்.
பிரதமர் மோடி இன்று 3 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு வருகை தந்தார். சென்னை நேரு உள் விளையட்டு அரங்கத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வருகை தந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை அடையாறு ஐ.என்.எஸ் தளத்தில் இருந்து கார் மூலம் நேரு உள்விளையாட்டு அரங்கம் வந்த பிரதமர் மோடிக்கு வழிநெடுக திரண்டு இருந்த பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடியும் கைகளை காட்டிய வரவேற்பை ஏற்றுக்கொண்டார். பின்னர் கோலோ இந்தியா போட்டிகளை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.
அதன் பின்னர் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு பிரதமர் மோடி சென்றார். பிரதமர் மோடியை இன்று பல்வேறு முக்கிய பிரமுகர்கள் சந்தித்து பேசினார்கள். அந்த வகையில், பிரபல நடிகர் அர்ஜுன் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
பாஜகவை பலப்படுத்த மக்கள் மத்தியில் பிரபலமானவர்களை குறிப்பாக நடிகர் நடிகைகளை பாஜகவில் இணைப்பது தொடர்பாகவும் பாஜக் காய் நகர்த்தி வருகிறது. இத்தகைய சூழலில் பிரதமர் மோடியை அர்ஜுன் சந்தித்து பேசியது பல்வேறு யூகங்களுக்கு அரசியல் வட்டாரத்தில் வழிவகுத்தது. இந்த நிலையில், மோடியை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அர்ஜூனிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு அர்ஜூன் அளித்த பதில் வருமாறு:-
என்னுடைய கோவிலுக்கு பிரதமர் மோடியை வருமாறு அழைப்பு விடுத்தேன். கூடிய சீக்கிரத்தில் வருவேன் என்று அவரும் சொல்லியிருக்கார்.. அவ்வளவு தான். சும்மா கேஷுவலாகத்தான் சந்தித்து பேசினேன். இப்போது தான் முதல் முறையாக மோடியை சந்திக்கிறேன்.. எங்களுக்கு ரொம்ப பிடித்த ஒரு மனிதர். எங்கள் வீட்டில் இருக்கும் எல்லாருக்கும் மோடியை பிடிக்கும். ரொம்ப பிடித்தமானவர். அவர் இன்று இங்கே வந்திருப்பதாக தகவல் கிடைத்தது.
இதனால் உங்களை சந்திக்க வேண்டும் என்று அப்பாயிண்ட்மண்ட் கேட்டோம். அவரும் உடனே கொடுத்துவிட்டார். அதன்படி இப்போது சந்தித்துவிட்டு வந்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். அப்போது செய்தியாளர்கள் நடிகர் அர்ஜூன் பாஜகவில் இணைந்துவிட்டார் என்று தகவல்கள் பரவுகிறதே என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து பேசிய நடிகர் அர்ஜூன், "அய்யய்யோ அப்படியெல்லாம் இல்லைங்க.. அரசியல் என்பதே எனக்கு அவ்வளவாக தெரியாது" என்று பேசினார்..
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications