கூட்டணி பற்றி முடிவெடுக்க எனக்கு அதிகாரம் இல்லை..கட்சி தலைமைதான் முடிவு எடுக்கும்.. அண்ணாமலை
சென்னை: அதிமுக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு தனித்து போட்டியிட அண்ணாமலை விரும்புவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், கூட்டணி பற்றி முடிவு எடுக்க எனக்கு அதிகாரம் இல்லை என்றும் கட்சி தலைமைதான் முடிவு எடுக்கும் என்றும் தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை கூறியுள்ளார்.
அதிமுக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு தனித்து போட்டியிட அண்ணாமலை விரும்புவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக தகவல் வெளியானது.
கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை இவ்வாறாக கூறியதாக தகவல் பரவியது. இதனால், அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா ? என்பது மீண்டும் விவாதப்பொருளானது. இந்த நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-

பணம் இன்றி தேர்தலை சந்திக்க முடியாது
தமிழக அரசியல் களத்தில் பணம் இல்லாமல் ஒரு தேர்தலை சந்திக்க முடியாது என்ற நிலை வந்துவிட்டது. அதில் தரம் மட்டும் மாறியிருக்கு... ஆளும் கட்சியகாக இருந்தால் இவ்வளவு.. எதிர்க்கட்சியாக இருந்தால் கொஞ்சம் குறைத்து கொடுத்தால் மக்கள் ஏற்றுக்கொள்வர்கள் என்ற அளவுக்கு அரசியல் மாறிவிட்டது. எனக்கு இதில் உடன்பாடு இல்லை. தனி மனிதனாகவும் உடன் பாடு இல்லை.

மிகப்பெரும் அரசியல் மாற்றத்திற்கு
பாரதிய ஜனதா கட்சியின் தொண்டனாகவும் மாநில தலைவராகவும் அதை போன்ற ஒரு தேர்தலை சந்திப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எந்தக் கட்சிக்கும் எதிராக நான் இல்லை. எல்லாக் கட்சிகளுமே அவர்களுடைய பயணத்தில் அவர்களுக்கு எது சரி என்று நினைக்கிறார்களோ.. அரசியல் செய்கிறார்கள். அவர்கள் அரசியல் செய்வது தப்பு என்று சொல்வதற்கு எந்த உரிமையும் கிடையாது. மிகப்பெரும் அரசியல் மாற்றத்திற்கு தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள். நேர்மையான அரசியலுக்கு மக்கள் காத்திருக்கிறார்கள்.

கடன்காரனாக இருக்கிறேன்
ஓட்டுக்கு பணம் கொடுக்காத அரசியலுக்கு காத்திருக்கிறார்கள். கூட்டணி பற்றி முடிவெடுக்க எனக்கு அதிகாரம் இல்லை. கட்சி தலைமைதான் முடிவெடுக்கும். என்னுடைய கருத்து குறித்து டெல்லி மேலிட தலைவர்களிடம் நான் பேசி வருகிறேன். சிறுக சிறுக சேர்த்த பணத்தை தேர்தலில் செலவு செய்து விட்டு தற்போது கடன்காரனாக இருக்கிறேன். காவல் அதிகாரியாக சிறுக சிறுக சேர்த்த பணத்தை அரவக்குறிச்சியில் செலவு செய்தேன்.

நான் யாருக்கும் எதிரி இல்லை
அரசியல் என்பது நேர்மையான நாணயமாக பணம் இல்லாத ஒரு அரசியலை முன்னெடுக்க வேண்டும். இல்லாவிடில் தமிழ்நாட்டில் மாற்றம் என்பது ஆயிரம் வருடங்கள் ஆனாலும் நடக்காது என்ற எண்ண ஓட்டத்திற்கு நான் வந்துவிட்டேன். அதை எனது கட்சிக்குள்ளும் நான் பேச ஆரம்பித்து விட்டேன். வருகின்ற காலத்தில் இன்னும் கொஞ்சம் ஆக்ரோஷமாக நான் பேசத்தான் போகிறேன். கூட்டணியை பற்றி அதற்கான நேரம் வரும் போது எங்களுடைய தலைவர்கள் சொல்வார்கள். நான் யாருக்கும் எதிரி இல்லை.

இந்த பாதையில் மட்டும் தான் பயணிக்க...
ஏதோ ஒரு மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்று நான் வந்து தவறுகளை செய்வதற்கு நான் தயராக இல்லை. அந்த அடிப்படையில் நான் அன்று சில வார்த்தைகளை பேசியிருந்தேன். நேரம் வரும் போது விவரமாக தீர்க்கமாக நான் பேசுகிறேன். எங்கள் சார்பாக நிறுத்தப்படும் வேட்பாளர் ஓட்டிற்கு ஒரு ரூபாய் கூட கொடுக்க மாட்டார்கள் என்று சொல்லும் போது அதற்கு என்று ஒரு வாக்கு வங்கி உள்ளது. நான் அரசியலில் நான் இதற்கு மேலே இருக்க வேண்டும், இப்படி ஒரு அரசியல்வாதியாக இருக்க வேண்டும் என்றால் இந்த பாதையில் மட்டும் தான் பயணிக்க வேண்டும் என்ற முடிவை நான் எடுக்க ஆரம்பித்து விட்டேன்.

நேர்மையான அரசியல் வர வேண்டும்
இப்படித்தான் அரசியல் போகனும்... நானும் என்னை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. அப்படி மாற்றிக்கொண்டு தான் அரசியலில் இருக்க வேண்டும் என்றால் அப்படிப்பட்ட அரசியல் தேவையில்லை என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். அந்தந்த கட்சி அவர்கள் யுக்தி படி வேலை செய்கிறார்கள். அவர்கள் ஜெயிக்கிறார்கள். எம்.எல்.ஏக்களாக இருக்கிறார்கள். அதை குறை கூறுவதற்கு எனக்கு உரிமையில்லை. அரசியல் மாற வேண்டும். நேர்மையான அரசியல் இங்கே வர வேண்டும். அதற்கு 2024- தேர்தல் அச்சாரமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய நம்பிக்கை" என்றார்.
-
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழ்நாட்டில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட புதிய டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications