என்னோட பேவரிட் தோனியை மிஸ் பண்ற பீலிங்கை அவாய்ட் பண்ண முடியல.. ஸ்டாலின்
சென்னை: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் விறுறுப்பாக மாறி இருக்கிறது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அத்தனை தலைவர்களும் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், சாம்சன் செஞ்சுரியைப் பார்த்தாலும், என்னோட பேவரிட் தோனியை மிஸ் பண்ற பீலிங்கை அவாய்ட் பண்ண முடியல என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ஒரு புகைப்படம், அரசியல் வட்டாரத்தைத் தாண்டி கிரிக்கெட் ரசிகர்களிடமும் வேகமாக வருகிறது.
"Amid a high-voltage campaign, a quick IPL break!" சாம்சன் செஞ்சுரியைப் பார்த்தாலும், என்னோட favourite தோனியை miss பண்ற feeling avoid பண்ண முடியல " என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், தேர்தல் பயணத்தின் போது காரில் இருந்தபடியே டேப்லெட்டில் ஐபிஎல் போட்டியை ரசித்துப் பார்க்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இன்று நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான மோதலைத்தான் அவர் பார்த்துக் கொண்டிருந்தார்.

அந்தப் பதிவில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்த விஷயம் தான் ஹைலைட். "சாம்சன் செஞ்சுரியைப் பார்த்தாலும், என்னோட ஃபேவரைட் தோனியை மிஸ் பண்ற ஃபீலிங்கைத் தவிர்க்க முடியல!" என்று ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகராகத் தனது உணர்வுகளை முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் விளாசிய அதிரடி சதத்தை ரசித்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் தல தோனி களத்தில் இல்லாத குறையை ஸ்டாலின் வெளிப்படையாகவே பதிவிட்டுள்ளார்.
வழக்கமாகத் தேர்தல் நேரத்தில் தலைவர்கள் மிகவும் சீரியஸாக, கோப்புகளைப் பார்த்தபடி அல்லது அடுத்த கூட்டத்திற்கான உரையைத் தயார் செய்தபடி தான் பயணம் செய்வார்கள். ஆனால், ஸ்டாலின் மிகவும் ரிலாக்ஸாக மேட்ச் பார்க்கும் இந்தப் புகைப்படம், அவர் எந்த அளவுக்கு கூலாக தேர்தலை எதிர்கொள்கிறார் என்பதைக் காட்டுவதாக திமுக தொண்டர்கள் சிலாகிக்கிறார்கள்.
ஏப்ரல் 23 தேர்தல் நெருங்கும் வேளையில், இந்த 'ஐபிஎல் பிரேக்' பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக வருகிறது. குறிப்பாக, திமுகவினர் மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் ஸ்டாலினின் இந்தப் பதிவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். "அரசியல் களத்தில் முதல்வர் ஸ்டாலின், கிரிக்கெட் களத்தில் தோனி - இருவருமே முடிசூடா மன்னர்கள்" என கமெண்ட்களை திமுகவினர் கூறி வருகிறார்கள். தேர்தல் பரபரப்புக்கு நடுவே, ஒரு நிமிடம் இளைப்பாற முதல்வர் தேர்ந்தெடுத்த இந்த கிரிக்கெட் ஜுரம், இப்போதைக்கு இணையத்தின் 'ஹாட் டாபிக்' ஆக இருக்கிறது.
-
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
30%க்கு மேல் வரி.. 13 வயதில் வைபவ் சூர்யவன்ஷி கட்டும் வரி எவ்வளவு தெரியுமா? தலையே சுத்துது போங்க -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
ஆர்சிபி வெற்றிக்கு 5 காரணங்கள்.. கார்த்திக் "அண்ணன்" பங்களிப்பை மறுக்க முடியுமா? -
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல் -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்!












Click it and Unblock the Notifications