"தனியா நின்னு இருக்கலாம்.. போக கூடாத இடத்துக்கு போயிட்டேன்".. பற்ற வைத்த பாரிவேந்தர்.. அப்போ திமுக?
சென்னை: ஐஜேகே கட்சியை சேர்ந்த எம்பி பாரிவேந்தர் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து மறைமுகமாக தாக்கி பேசி உள்ளார்.
திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட எம்பி பாரிவேந்தர் கடந்த சில நாட்களாக திமுகவை நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கி பேசி வருகிறார். அதோடு இவர் பாஜகவுடன் நெருக்கமும் காட்டி வருகிறார்.
தமிழ்நாட்டில் திமுக 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 38ல் வென்றது.
இதில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட இந்திய ஜனநாயக கட்சி எம்பி பாரிவேந்தரும் கூட பாஜகவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். சமீபத்தில் இவர் பிரதமர் மோடியை நேரடியாக பாராட்டினார்.

விமர்சனம்
இதனால் அவர் எங்கே பாஜக பக்கம் தாவ போகிறாரோ என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தமிழ்நாட்டில் இருந்து திமுக, அதிமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளை அகற்ற வேண்டும். திராவிட இயக்கங்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டு பரபரப்பை கிளப்பினார். அதாவது திராவிட இயக்கங்களை தமிழ்நாட்டில் இருந்தே அகற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார். இந்த நிலையில்தான் தனது எம்பி பதவி குறித்து கடுமையாக பேசி இருக்கிறார்.

என்ன பேசினார்?
அவர் திருச்சியில் நேற்று நடைபெற்ற கட்சிப் நிர்வாகி இல்ல திருமண விழாவில் பேசிய போது, வளர்ந்த காட்சிகள் கல்யாண மேடைகளில் அரசியல் பேசுகிறார்கள். இப்படித்தான் ஆட்சியை பிடிக்கிறார்கள். சாதி இல்லை என்று சொல்வார்கள். ஆனால் தொகுதியில் இருக்கும் சாதி பெரும்பான்மையை பார்த்துதான் அவர்கள் ஆட்களை நிற்க வைப்பார்கள். அப்படித்தான் இவர்கள் ஆட்சியை பிடிக்கிறார்கள்.

பாஜக
நான் ஏற்கனவே பாஜக கூட்டணியில் இருந்தேன். அப்போது 2.40 லட்சம் வாக்குகள் பெற்று வென்றேன். அதன்பின் வேறு கூட்டணிக்கு சென்றேன். நான் போக கூடாத இடத்திற்கு சென்று இருக்க கூடாது. எம்பி பதவி என்பது சிறு அடையாளம்தான். என் அடையாளத்தின் சிறு துளிதான் அது. அதற்காக நான் போக இடத்திற்கு சென்று இருக்க கூடாது. நான் கூட்டணியில் இல்லாமல் தனித்து போட்டியிட்டிருந்தால் வென்று இருப்பேன். தனித்து நின்று இருந்தால் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று இருப்பேன்.

வேதனை
தனியாக நிற்காமல் விட்டு விட்டோமே என்று ஒவ்வொரு நாளும் வேதனை படுகிறேன். இப்படி அவசரப்பட்டுடேனே என்று ஒவ்வொரு நாளும் நினைக்கிறேன், என்று காட்டமாக கூறியுள்ளார். திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட எம்பி பாரிவேந்தர், தான் கூட்டணியிலேயே போட்டியிட்டு இருக்க கூடாது.. போக கூடாத இடத்திற்கு சென்றுவிட்டேன் என்றெல்லாம் காட்டமாக பேசி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வருத்தம்?
திமுக எம்.பி. பதவியை இவர் ராஜினாமா செய்யாமல் திமுக எம்.பி.யாக தொடர்ந்து இயங்கி வருகிறார். அப்படி இருக்கும் போது கூட்டணி கட்சிக்கு எதிராகவே இவர் ஏன் பேச வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் 2024 லோக்சபா தேர்தலில் இவர் பெரும்பாலும் திமுக கூட்டணியில் நீடிக்க வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது. 2024ல் பாஜக கூட்டணியில் இவர் ஐக்கியம் ஆகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications