பசிக்காக வாழை பழம் திருடியவன் நான்.. ஸ்டாலின் முன் கலங்கியபடி பேசிய மாரி செல்வராஜ்!
சென்னை: ‛‛நான் முதல் முதலில் திருட்டு பழக்கத்தை பசியில் தான் கற்றுக்கொண்டேன். நான் வாழைப்பழத்தை தான் முதலில் திருடினேன். என் வீட்டுக்குள், பள்ளிக்கும் 4 கிலோமீட்டர். தினமும், 4 கிலோமீட்டர் நடந்து சென்று வருவேன். நான் பசியோடு தான் பள்ளிக்கு செல்வேன். பசியோடு தான் வீட்டுக்கு வருவோம். இதற்கு நடுவே நாங்கள் கற்றுக்கொண்டது தான் வாழை தோட்டத்துக்குள் புகுந்து வாழை பழங்களை சாப்பிடுவது தான் எங்களின் உணவாகவே இருந்தது. என்னுடன் படித்த பலரும் பசியால் படிப்பை கைவிட்டனர். இதனால் காலை உணவு திட்டம் வந்த பிறகு நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது'' என்று கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசினார்.
சென்னை நேரு ஸ்டேடியத்தில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பெயரில் இன்று விழா நடந்தது. இந்த விழாவில் தமிழக அரசின் நலத்திட்டத்தில் பள்ளி, கல்லூரியில் படித்து சாதனை புரிந்த மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்றார்.

முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள், மாணவ-மாணவிகள், ஆசிரியர், ஆசிரியைகள், நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்பட பலரும் பங்கேற்றனர். இந்த விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியதாவது:
கல்வியில் சிறந்த தமிழ்நாடு. இந்த தலைப்பை கேட்டபோதே அவ்வளவு பெருமையாக இருந்தது. முக்கியமாக இந்த ஒரு விஷயத்தை சொல்வதற்காக தான் இங்கு வந்தேன். வாழை திரைப்படம் ரிலீசான பிறகு திடீரென்று ஒரு போன் கால் வந்தது. முதல்வர் திரைப்படத்தை அமெரிக்காவில் பார்த்து கொண்டிருக்கிறார். உங்களுக்கு கால் செய்வார் என்று சொன்னார்கள். அதற்காக நான் காத்திருந்தேன்.
என்னுடைய எல்லா திரைப்படங்களுக்கும் அவர் போன் செய்து பேசி உள்ளார். இதனால் வாழை திரைப்படம் பற்றி அவர் பேசுவதற்காக நான் ஸ்பெஷலாக காத்திருந்தேன். ஏனென்றால் தமிழ்நாட்டின் முதல்வர் வாழை போன்ற படத்தை பார்த்துவிட்டு என்ன சொல்வார் என்று எதிர்பார்த்து காத்திருந்தேன். தமிழ்நாடு அரசிடம் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இந்த விஷயத்தை பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டே இருந்தேன். அது காலை உணவு திட்டம் தான்.
நான் வாழை திரைப்படத்தை எடுக்கும்போது ஒரு பையன் வாழைப்பழத்தை திருடுவான். நான் முதல் முதலில் திருட்டு பழக்கத்தை பசியில் தான் கற்றுக்கொண்டேன். நான் வாழைப்பழத்தை தான் முதலில் திருடினேன். என் வீட்டுக்குள், பள்ளிக்கும் 4 கிலோமீட்டர். தினமும், 4 கிலோமீட்டர் நடந்து சென்று வருவேன். அந்த காலக்கட்டத்தில் அம்மா - அப்பா வீட்டில் இருக்கமாட்டார்கள். காலையிலேயே அவர்கள் வேலைக்கு சென்று விடுவார்கள். நான் எழுந்திரிக்கும்போது அவர்கள் இருக்கமாட்டார்கள்.
நான் பசியோடு தான் பள்ளிக்கு செல்வேன். பசியோடு தான் வீட்டுக்கு வருவோம். இதற்கு நடுவே நாங்கள் கற்றுக்கொண்டது தான் வாழை தோட்டத்துக்குள் புகுந்து வாழை பழங்களை சாப்பிடுவது தான் எங்களின் உணவாகவே இருந்தது. காலை, மாலையில் நாங்கள் அனைவரும் வாழை தோட்டத்துக்குள் புகுந்து யார் யாருக்கு எவ்வளவு வாழைப்பழம் சாத்தியப்படுகிறதோ. அதனை சாப்பிடுவோம்.
பசி என்பது பெரிய போராட்டம். பசியால் படிப்பை நிறுத்தியது ஏராளமானவர்கள். என்னுடன் படித்த பலரும் பசியால் படிப்பை கைவிட்டனர். காலை உணவு திட்டம் வந்த பிறகு நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. அதனை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. இதை முக்கியமான பாய்ச்சலாக பார்க்கிறேன். என்னுடன் படித்து படிப்பை பாதியில் நிறுத்திய பலருக்கும் பெரிய அழுகையாக இருந்திருக்கும். அதற்கு ரொம்ப நன்றி.
நான் திருநெல்வேலியில் இருந்து வந்துருக்கிறேன். பள்ளியில் மீற முடியாத, தாண்ட முடியாத, ஜெயிக்க முடியாத விஷயம் சாதிய உளவியல் தான். அதற்குள் அடங்க முடியாமல் நான் பட்ட கஷ்டம் ஜாஸ்தி. இப்போது சமூக நீதி, சமத்துவம் என்ற வார்த்தையை ஓங்கி ஒழிக்க கூடிய வேலையை பள்ளி கல்வித்துறை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறது. பள்ளியில் இருந்த சாதி பெயர்கள் அகற்றியதை நான் பெரிய பாய்ச்சலாக பார்க்கிறேன். பள்ளிக்கூடமே என்னுடைய பள்ளிக்கூடம் தான் என்று என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். அதை அனைத்தையும் ஒழித்து கட்டு பள்ளிக்குள் நடக்கும் ஒரு யுத்தத்தை இன்னொரு அறிவு யுத்தமாக கல்வித்துறை செய்துள்ளது. அதற்கு கோடாணக்கோடி நன்றிகள்'' என்றார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications