விஜய், அஜித், ரஜினி.. ஒரே பதிலில் 3 பேரையும் பாராட்டி.. அசால்ட்டாக "ஸ்கோர்" செய்த ஸ்டாலின்.. சூப்பர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர்கள் விஜய், அஜித் , ரஜினிகாந்த் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது சென்னையில் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

பிஸியான பிரச்சாரத்திற்கு இடையே "ஸ்டாலின் செய்வாரா" என்ற பெயரில் சன் டிவி நடத்திய நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பதில் அளித்தார். அரசியல் கடந்த பல சுவாரசியமான கேள்விகளுக்கு ஸ்டாலின் அசால்ட்டாக பதில் அளித்தார்.

பதில்

பதில்

அரசியல் கடந்த பர்சனல் கேள்விகள் பலவற்றுக்கும் இந்த "ஸ்டாலின் செய்வாரா" நிகழ்ச்சியில் அவர் பதில் சொன்னார். ஸ்டாலின் தனது பேச்சில், எனக்கு நான்கு பேரக்குழந்தைகள். இவர்கள் நான்கு பேருடன் ஜாலியாக பேசி விளையாடுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். எவ்வளவு அரசியல் பணிகள் இருந்தாலும் இவர்களோடு இருக்கும் போது மனசு லேசாகிவிடும். இதுதான் எனக்கு பொழுது போக்கு.

மீம்ஸ்

மீம்ஸ்

வாரத்தில் ஒரு நாளாவது இவர்களோடு சாப்பிட்டு, விளையாடுவேன் என்றார். மீம்ஸ் குறித்த கேள்விக்கு, அரசியல் மீம்ஸ்களை அதிகம் பார்ப்பேன், காமெடியாக இருக்கும் மீம்களை ரசிப்பேன். மீம்களை பார்த்து கோபம் அடைந்தது இல்லை. இளைஞர்களின் திறமையை பார்த்து வியந்து இருக்கிறேன். அரசியலில் இதை எல்லாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

சினிமா

சினிமா

இதில் ஸ்டாலினிடம் நீங்கள் சினிமா பார்ப்பீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஸ்டாலின், அவ்வப்போது சினிமா பார்ப்பேன். நல்ல சினிமா என்றால், தரமான படம் என்றால் பார்ப்பேன். சினிமா பொறுத்தவரை ஸ்டைல் நடிகர் என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை எனக்கு மிகவும் பிடிக்கும். இளைஞர்களை கவர கூடிய வகையில் விஜய்யை எனக்கு பிடிக்கும்.

அளித்த

அளித்த

நவரசம் கலந்த நடிப்பில் அஜித்தை எனக்கு மிகவும் பிடிக்கும், இவர்கள் மூன்று பேர் படங்களை பார்ப்பேன், என்று ஸ்டாலின் குறிப்பிட்டார். ஒரே கேள்விக்கு மூன்று முக்கியமான நடிகர்களையும் பிடிக்கும் என்று ஸ்டாலின் கூறியது பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. ஸ்டாலினின் பதிலை கேட்டு அங்கிருந்த இளைஞர்கள் அசந்து போக.. அட நல்ல பதிலா இருக்கே என்று கைதட்டினார்கள்.

ஸ்டாலின்

ஸ்டாலின்

தமிழகத்தில் இவர்கள் மூவருக்கும் நிறைய ரசிகர்கள் உள்ள நிலையில், ஒரே கேள்வியில் மூன்று ஹீரோக்கள் குறித்தும் பேசி ஸ்டாலின் ஸ்கோர் செய்துள்ளார். ஸ்டாலின் இப்படி விஜய், அஜித், ரஜினி குறித்து பேசியது இணையத்தில் அவர்களின் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+