சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"நான் கிறிஸ்டின்.. என்னால் தேசிய கொடிக்கு சல்யூட் அடிக்க முடியாது!" பள்ளி தலைமை ஆசிரியை பரபர வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: சுதந்திர தினத்தன்று தர்மபுரியைச் சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் தேசிய கொடியை ஏற்ற மறுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    ’யகோபாவின் சாட்சி’ கடவுளுக்கு மட்டும் மரியாதை! தேசிய கொடி ஏற்ற முடியாது! அதிர வைத்த தலைமை ஆசிரியை!

    இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதன்படி 76ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் திங்கள்கிழமை உற்சமாகக கொண்டாடப்பட்டது.

    பிரதமர் நரேந்திர மோடி விடுத்திருந்த அழைப்பை ஏற்று நாடு முழுவதும் பொதுமக்கள் தேசிய கொடிகளை ஏற்றினர். சுதந்திர தினத்தன்று நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்டவர்களின் தியாகம் நினைவு கூரப்பட்டது.

    அது என்ன 9 வகை தானியங்கள்? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கிய பரிசின் முக்கியத்துவம் இதுதான் அது என்ன 9 வகை தானியங்கள்? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கிய பரிசின் முக்கியத்துவம் இதுதான்

     சுதந்திர தினம்

    சுதந்திர தினம்

    தலைநகர் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார். அதேபோல அனைத்து மாநில முதல்வர்களும் அந்தந்த மாநிலங்களில் தேசியக் கொடியை ஏற்றினர். மேலும், நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், அலுவலகங்கள் என பல்வேறு இடங்களிலும் மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிலையில், தர்மபுரியில் பள்ளி தலைமை ஆசிரியை ஒருவர் தேசியக் கொடி ஏற்ற மறுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

     தர்மபுரி பள்ளி

    தர்மபுரி பள்ளி

    தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகேவுள்ள பேடரஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் சுதந்திர சுதந்திர தினவிழா கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதன்படி கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி மாணவர்கள் அனைவரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளிக்கு வந்திருந்தனர். பொதுவாகப் பள்ளியின் முதல்வரே தேசியக் கொடி ஏற்றுவார். இருப்பினும், அந்தப் பள்ளியின் முதல்வராக இருந்த தமிழ்செல்வி தேசியக் கொடியை ஏற்ற மறுத்ததாகக் கூறப்படுகிறது.

     பரபரப்பு

    பரபரப்பு

    இதனால் சிறிது நேரம் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து துணை தலைமை ஆசிரியர் முருகன் தேசியக் கொடியை ஏற்றினார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மத நம்பிக்கை காரணமாகவே தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தேசியக் கொடியை ஏற்றவில்லை என்று தகவல்கள் வெளியாகின. இதற்கு இணையத்திலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

     வீடியோ

    வீடியோ


    தமிழ்செல்வி இந்த ஆண்டு உடன் ஓய்வு பெற உள்ளார். தேசியக் கொடி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் வகையில் அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர், "நான் யகோபாவின் சாட்சி என்ற கிருத்துவ பிரிவைச் சேர்ந்தவர். எங்கள் மதத்தின் விதிமுறைப்படி கடவுளை மட்டுமே வணங்க வேண்டும். வணக்கம் என்பது எங்கள் தெய்வத்திற்கு மட்டுமே. எனவே எங்களால் தேசியக் கொடியை ஏற்றி வணங்க முடியாது" என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

     வணங்க முடியாது

    வணங்க முடியாது

    மேலும் அவர், "தேசியக் கொடியை மட்டுமே வணங்க முடியாது. அதேநேரம், நாங்கள் இந்தச் சட்டத்திற்கு முழுமையாகப் பின்பற்றுவோம். மற்ற மதங்களையும் மதிக்கிறோம். தேசியக் கொடியையும் மதிக்கிறோம். ஆனால், வணங்க மட்டுமே முடியாது. தேசியக்கொடியை அவமதிப்பது எனது நோக்கம் இல்லை. இதில் யாராவது புண்பட்டு இருந்தால், மன்னித்து விடுங்கள். எனது நோக்கம் அது இல்லை" என்று கூறி இருந்தார்.

     புகார்

    புகார்

    இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இது தொடர்பாக தர்மபுரி முதன்மைக் கல்வி அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதில் சுதந்திர தின விழாவில் தலைமை ஆசிரியை என்ற பொறுப்பில் இருக்கும் தமிழ்செல்வி கொடியேற்றவில்லை என கூறப்பட்டு உள்ளது. பல ஆண்டுகளாகவே உடல்நிலை சரியில்லை என்று கூறி சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளாமல் அவர் விடுப்பு எடுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருப்பதாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது.

    English summary
    Dharmapuri government school's headmistress refused to hoist the national flag during independence day event: (தேசியக் கொடி ஏற்ற மறுத்த தர்மபுரி பள்ளி தலைமை ஆசிரியை) Dharmapuri latest news in tamil.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X