எவ்வளவு காசு கொடுத்தாலும் இறப்பு சீனில் நடிக்கவே மாட்டேன்.. மரணம் பற்றி டெல்லி கணேஷ் சொன்ன விஷயம்
சென்னை: எவ்வளவு பணம் கொடுத்தாலும் இறந்து போகிற மாதிரி சீன் எல்லாம் வைத்தால் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிடுவேன். யாரையோ படுக்க வைத்து மாலை போட்டுக்கொள்ளுங்கள்.. என்னை படுக்க வைத்து மாலையை போடுவது, அழுவது எல்லாம் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று டெல்லி கணேஷ் முன்பு கூறியுள்ளார்.
பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு வயது முதிர்வு, உடல் நலக்குறைவால் காலமானார். கலைத்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்து காமெடி, வில்லன், குணச்சித்திர கேரக்டர் என எல்லா கதாபாத்திரத்திலும் அற்புதமாக நடிக்கும் அசாத்திய திறன் பெற்றவர். நேற்று இரவு 11.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 80.

டெல்லி கணேஷின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு (முன்பு திருநெல்வேலி) ஆகும். உடன்பிறந்தோர் மொத்தம் 11 பேர். 9 பேர் ஆண்கள். 2 பெண்கள். முதலில் இந்திய விமானப்படையில் தான் டெல்லி கணேஷ் பணி செய்து வந்தார். அதாவது 1964 முதல் 1974 வரை டெல்லி கணேஷ் விமானப்படையில் பணியாற்றினார். இதன்பிறகு திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று அப்பணியில் இருந்து விலகினார்.
இயக்குனர் கே பாலச்சந்தரால் டெல்லி கணேஷ் என்ற பெயர் கிடைத்தது. பட்டின பிரவேசம் என்ற படத்தில் இயக்குனர் கே பாலச்சந்தர் டெல்லி கணேஷை திரைத்துறையில் அறிமுகம் செய்தார். இதனை தொடர்ந்து நடிகர், வில்லன், காமெடியன், குணச்சித்திர வேடம் என எல்லா கதாப்பாத்திரத்திலும் நடிக்க ஆரம்பித்தார். சுமார் 400க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
எல்லாவித கேரக்டர்களிலும் நடித்த டெல்லி கணேஷ் எவ்வளவும் பணம் கொடுத்தாலும் இறந்து போனது போன்ற சீனில் மட்டும் நடிக்க மாட்டேன் என்று சொல்லியிருக்கிறார். படுக்க வைத்து மாலையை போட்டு அழுவது எல்லாம் ஒத்துவராது என்று கூறியிருக்கிறார். இது தொடர்பாக டெல்லி கணேஷ் கூறியிருப்பதாவது:-
எவ்வளவு பணம் கொடுத்தாலும் இறந்து போகிற மாதிரி சீன் எல்லாம் வைத்தால் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிடுவேன். யாரையோ படுக்க வைத்து மாலை போட்டுக்கொள்ளுங்கள்.. என்னை படுக்க வைத்து மாலையை போடுவது, அழுவது எல்லாம் ஒத்துக்கொள்ள மாட்டேன்.. நீங்க கொடுக்கிற காசுக்கு அதெல்லாம் பண்ண முடியாது என சொல்லிவிடுவேன்.
நிறைய காசு கொடுத்தால் பண்ணுவீர்களா என்று கேட்பார்கள்.. எவ்வளவு கொடுத்தாலும் செய்ய மாட்டேன் என்று சொல்லிவிடுவேன். இறப்பு மேலே யாருக்கு பயம் இல்லை. இந்த தேதியில் இறந்துவிடுவேன் என சொன்னால் பயப்படாதவர்களே இருக்க மாட்டார்கள். இறப்பு என்பது திடீரென்று வருவதுதான்.. மரணம் என்பது நிரந்தரம். அது தெரியாத வரைக்கும் நாம ராஜா" என்றார்.
பட்டின பிரவேசம் படத்தில் அறிமுகமான டெல்லி கணேஷ், 1981ல் எங்கம்மா மகாராணி படத்தில் ஹீரோவாக நடித்தார். கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் (1989) படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்றார். இதுவும் பெரிய ஹிட் அடித்தது. 1979 இல் பாசி படத்தில் நடித்ததற்காக தமிழ்நாடு மாநில திரைப்பட விருதின் சிறப்புப் பரிசைப் பெற்றார். 1994 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா வழங்கிய கலைமாமணி போன்ற மாநில விருதுகளையும் டெல்லி கணேஷ் பெற்றுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications