Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2025யை மறக்க முடியாது.. சாதனைகளை பட்டியலிட்டு நடிகர் அஜித் குமார் திடீர் அறிக்கை.. கலக்குறாரே

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் அஜித் குமார் சார்பில் இன்று திடீரென்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் 2025ம் ஆண்டை மறக்க முடியாது. ஆர்வம் மற்றும் அடக்கு மனப்பாங்கு இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று கூறியுள்ள அஜித் குமார், 2025ல் அடைந்த சாதனைகளை பட்டியலிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். தற்போது அஜித் குமார் ரேசிங் என்ற பெயரில் அணியை உருவாக்கி ரேஸிங்கில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தான் நடிகர் அஜித் குமார் சார்பில் இன்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ajith kumar racing car race

அஜித் குமார் ரேசிங் - மறக்க முடியாத முதல் சீசன்! ஆர்வம், பொறுமை முன்னேற்றம் - மூன்றின் பயணம், பார்சிலோனா அக்டோபர் 2025
பயிற்சியில் இருந்து பேரறிவுக்கு பயணம்

2025ம் ஆண்டின் ரேசிங் சீசன், அஜித் குமார் சேரிங் குழுவுக்கு வெறும் போட்டியல்ல. - அது ஒரு கற்றல் பயணம். ஒவ்வொரு சுற்றிலும் சவால்கள், தோல்விகள், வெற்றிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு புதிய இந்திய அணியின் ஆற்றலை உலக ரேசிங் மேடையில் வெளிப்படுத்திய ஆண்டு இது.

துபாயின் வெப்பமான பாலைவனத்திலிருந்து வடைரோப்பாவின் பனிமூட்டம் சூழ்ந்த காலை வரை - ஒவ்வொரு ரேஸும் இந்த அணியை புதிதாக வடிவமைத்தது. 2024 அக்டோபரில் பார்சிலோனாவில் நடைபெற்ற Porsche Cup சோதனைகளுடன் தொடங்கிய பயணம், சரியான பன்னிரண்டு மாதங்களுக்கு பிறகு அதே சுற்றுப்பாதையில் நிறைவடைந்தது - ஆர்வம் மற்றும் அடக்கு மனப்பாங்கு இணைந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை நிரூபித்த சீசன் இது.

புதிய அணி என்ற வகையில் Ajith Kumar Racing பல சவால்களை எதிர்கொண்டது. சக்திவாய்ந்ததும் சிக்கலானதுமான Porsche 992 GT3 Cup காரை ஓட்டுவது வெறும் வேகத்தால் மட்டுமல்ல - அதற்கேற்ப மரியாதை, துல்லியம், அனுபவம் ஆகியவற்றையும் தேவைப்படுத்தியது. முகெல்லலோ, பால் ரிக்கார்ட், மிசோனா போன்ற ஒவ்வொரு சர்வதேச சுற்றுப்பாதையும் குழுவுக்கே ஒரு புதிய பாடமாக அமைந்தது.

போட்டிகள் மற்றும் சாதனைகள்

அஜித் குமார் ரேசிங் அணி 2025ம் ஆண்டில் பின்வரும் முக்கிய சாம்பியன்ஷிப்களில் பங்கேற்றது:

* 24H iddle East Trophy - Porsche Cup
* 24H European Series - Porshce Cup: மொத்த புள்ளி பட்டியலில் மூன்றாம் இடம்
* Porsche Sprint Challenge Southern Europe - Porsche Cup
* GT 4 European Series

முக்கிய முடிவுகள்
துபாய் (ஜனவரி 2025) - மூன்றாம் இடம்
முகெல்லோ (மார்ச் 2025) - மூன்றாம் இடம்
ஸ்பா - ப்ராங்கோர்சாம்ப் (ஏப்ரல் 2025 ) - இரண்டாம் இடம்

போர்டிமாவ், எஸ்டோரில், வாலென்சியா, பார்சிலோனா, மிசானோ, பால் ரிக்கார்ட் போன்ற சுற்றுகளில் சிறந்த செயல் திறன்.

GT4 European Series - Porsche GT 4
* பால்ரிக்கார்ட் (ஏப்ரல் 2025)
* சாண்ட்வூர்ட் (மே 2025)
* ஸ்பா (ஜூன் 2025)
* மிசானோ (ஜூலை 2025)
* நூர்புர்க்ரிங் (ஆகஸ்ட் 2025)
* பார்சிலோனா (அக்டோபர் 2025)

இரண்டு கண்டங்களில் மொத்தம் 26 போட்டிகளில் பங்கேற்று, ஒரு இந்திய அணியாக இதுவரை இல்லாத அளவில் விரிவான சர்வதேச ரேசிங் அனுபவத்தை பெற்றுள்ளது அஜித் குமார் ரேசிங்.

ஒவ்வொரு ரேஸ் நாளின் பின்னாலும் எண்ணற்ற மணிநேர உழைப்பு, பொறுமை, சோர்வற்ற மனநிலை இருந்தது. மெக்கானிக்குகள், இன்ஜினியர்கள், இரவெங்கும் இயந்திரங்களை சரிசெய்தனர். ஓட்டுநர்கள் மலை, குளிர், வெப்பம் அனைத்திலும் தங்களின் எல்லைகளை தாண்டி பணி செய்தனர். தோல்விகளும், தொழில்நுட்ப கோளாறுகள், தவறிய வாய்ப்புகளும் இருந்தன. ஆனால் ஒவ்வொரு தோல்வியும் ஒரு புதிய பாடமாக மாறியது. ஒவ்வொரு சுற்றும் - வெற்றி அல்லது தோல்வி - அணியின் வளர்ச்சிக்கும் அனுபவத்துக்கும் அடித்தளமாக அமைந்தது.

‛‛இந்த ஆண்டில் நடந்த அனைத்தையும் சொல்வதற்கு ஒரு புத்தகம் போதும்; ஆனால் முக்கியமானது, ஒவ்வொரு சுற்றிலும் நாங்கள் வலுவாகி வந்தோம். இது தொடக்கம் மட்டுமே''. - அஜித் குமார் மற்றமு் அஜித் குமார் ரேசிங் அணி.

இந்த சீசன், போட்டிகளை கடந்து மனித உறவுகளையும் கட்டியெழுப்பிய பல சர்வதேச அணிகளும், அமைப்புகளும் ஒரே ஆர்வம் கொண்ட நபர்களும் AKR அணியுடன் இணைந்தனர்.

மைல்கற்களும் நன்றியும்

இந்த முதல் சீசனில் பல சாதனைகள் உருவானது - பல சர்வதேச தொடர்ச்சியான ரேசிங் தொடர்களில் முழுமையாக பங்கேற்க முதல் இந்தி அணி. சர்வதேச போட்டியில் வெற்றி மற்றும் உலக தரத்திலான திட்டமிடல் மற்றும் குழு ஒருங்கிணைப்பு அனுபவம்.
இந்த பயணத்துக்கு துணை நின்ற ஒவ்வொருவருக்கும் இதயபூர்வ நன்றியை தெரிவித்து கொள்கிறது.:

* Series organiser: Creventic, Prospeed, SRO - சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் ஆதரவுக்காக
* Partner Teams: Redant Racing, AV Racin - தொழில்நுட்ப நுணுக்கம் மற்றும் ஒத்துழைப்புக்காக
* Team Members: புதியவர்களும், பழையவர்களும் - உழைப்புக்காக
* Fans & Supporters: ஒவ்வொரு ரேஸிலும், ஒவ்வொரு பதிவிலும் அன்பு, ஊக்கம், நம்பிக்கை வழங்கியதற்காக.
* Support Staff: பின்னணியில் உழைத்து ஒவ்வொரு ரேஸையும் சாத்தியமாக்கிய தொழில்நுட்ப பணியாளர்கள்.

அடுத்த கட்ட நோக்கம்:

முதல் சீசன் நிறைவடைந்துள்ள நிலையில் அஜித் குமார் ரேசிங் அணி இப்போது வெற்றி பெற்ற அணியாக மட்டுமல்ல, அனுபவத்தால் செழித்த அணியாகவும் திகழ்கிறது. Porsche Cup மற்றும் GT 4 போட்டிகளில் பெற்ற அனுபவம், எதிர்காலத்திற்கான வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது.

அணி தற்போது தொடர்ந்து சோதனைகள், புதிய திட்டமிடல் மற்றும் சர்வதேச ரேசிங் துறையில் தன் தடத்தை விரிவாக்கம் செய்வதில் கவனம் செலுத்துகிறது.

‛‛ இந்த பயணம் எங்களின் கடின உழைப்பும், தாழ்மையும் சேர்ந்த விளைவு. இதுவரை கற்றதையெல்லாம் அடுத்த கட்ட பயணத்தில் இன்னும் சிறப்பாக பயன்படுத்துவோம்'' - அஜித் குமார் மற்றும் அஜித் குமார் ரேசிங் அணி'' என தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+