தோழர் பினராயி விஜயனை வணங்குகிறேன்.. விஜய் சேதுபதி உருக்கம்!
கஜா புயல் நிவாரணத்திற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் உதவி செய்ய முன்வந்ததற்கு நடிகர் விஜய் சேதுபதி நன்றி தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: கஜா புயல் நிவாரணத்திற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் உதவி செய்ய முன்வந்ததற்கு நடிகர் விஜய் சேதுபதி நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இரண்டு வாரம் முன் வீசிய கொடூர கஜா புயலால் சொல்ல முடியாத இழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்டா மாவட்ட மக்கள் பேரிழப்பை சந்தித்து இருக்கிறார்கள்.

கஜா புயல் சேதத்தில் தமிழகத்திற்கு உதவ கேரளா அரசு கரம் கொடுத்து உள்ளது. தமிழகத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளார்.
10 கோடி ரூபாய் பணம், உணவு, உடை ஆகியவை வழங்குவதாகவும், பணியாளர்கள் உதவியை அளிக்க உள்ளதாகவும் கூறினார். இதற்காக அவர் தமிழிலேயே டிவிட் செய்து இருந்தார்.
கேரள முதல்வரின் இந்த நடவடிக்கைக்கு பலர் நன்றி தெரிவித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் புயலால் பாதித்த தமிழகத்திற்கு உதவிய கேரள அரசுக்கு நடிகர் விஜய் சேதுபதி நன்றி தெரிவித்துள்ளார்.
புயல் தாக்கிய அடுத்த நாளே நிவாரணப் பொருட்களை அனுப்பியதோடு இன்று தமிழர்களின் துயரை துடைக்கும் விதத்தில் தற்போது 10 கோடி ரூபாய் நிதியையும் அறிவித்த கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் அவர்களின் சகோதரத்துவ மனிதம் கண்டு மகிழ்ச்சியோடும் நன்றிகளோடும் வணங்குகிறேன்...
— VijaySethupathi (@VijaySethuOffl) November 29, 2018
அவர் தனது டிவிட்டில், புயல் தாக்கிய அடுத்த நாளே நிவாரணப் பொருட்களை அனுப்பியதோடு இன்று தமிழர்களின் துயரை துடைக்கும் விதத்தில் தற்போது 10 கோடி ரூபாய் நிதியையும் அறிவித்த கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் அவர்களின் சகோதரத்துவ மனிதம் கண்டு மகிழ்ச்சியோடும் நன்றிகளோடும் வணங்குகிறேன், என்றுள்ளார்.
கேரளாவில் சமீபத்தில் வெளியான 96 படம் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் பிரேமம் கொண்டாடப்பட்டது போலவே கேரளாவில் 96 வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications