நாம் தமிழர் 'சீமான்' விவகாரம்.. 'வீரலட்சுமி' யின் 'அந்த' வட தமிழ்நாடு ' வார்னிங்'- அனலடிக்கும் களம்!
சென்னை: தாம் நினைத்தால் வட மாவட்ட எல்லையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானால் கால் வைக்கவே முடியாது என தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவள்ளூரில் நேற்று செய்தியாளர்களிடம் வீரலட்சுமி கூறியதாவது: நான் ஜாதி மறுப்பாளன். என்னை நாயுடு நாயுடு என்று சொல்வதால் என் ஜாதி சான்றிதழை நான் வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. திரும்ப திரும்ப வதந்தியை பரப்பினால் நான் என் ஜாதியை திரும்ப திரும்ப சொல்ல வேண்டியதுதான் வரும்.

இன்னைக்கும் நான் சொல்றேன்.. என் படையை திரட்டி நான் வந்தன்னா.. வட மாவட்டத்தில் சீமான் ஒரு ஓட்டு வாங்க முடியாது. வட மாவட்ட எல்லையில் நீ கால் வைக்கமாட்ட....
சட்டம் ஒழுங்கை யார் சீர்குலைப்பது? மீடியாவில் நேற்று சீமான் என்னை வெட்டிப் போட்டு போயிடுவேன்.. அவ இவ.. அது இது.. வீரலட்சுமி யாரு? யாரு?என கேட்கிறார் சீமான். என்னை யார் என சீமானுக்கு தெரியாதா? வீடியோ ஆதாரங்கள் தரட்டுமா? உங்க திருமணத்துக்கு ஒரு தங்கச்சியா வந்து வாழ்த்திவிட்டு வந்த என்னை யார்னு தெரியாதா? சும்மா.. இந்த மிரட்டல் உருட்டல் எல்லாம் வெச்சுக்கக் கூடாது சீமான் அவர்களே!
என்கிட்ட வெச்சிக்காதீங்க.. வடமாவட்டத்துல ஒரு ஓட்டு வாங்க முடியாது.. ஒரு சீட்டும் அடிக்க முடியாது... நான் போராட்ட களத்தில் இறங்கவில்லை. நான் தேர்தல் களத்தில் இன்னும் தீவிரமாக இறங்கவில்லை. கருத்தியல் என்றால் கருத்தியல் ரீதியாக வருவேன்.
நான் ஷத்திரிய ஜாதி. என் தாத்தாவும் பாட்டியும் என் காலை ஒருத்தன் மிதிச்சா தலையை சீவுன்னு சொல்லி இருக்கிறார். என் மாமானர் யார் என வடசென்னையில் கேளுங்க..
ஒரு மீசை வெச்ச ஆம்பளையா இருந்த சீமானும் அவரது படையும் என்கிட்ட தனியாக வரட்டும்.. நான் அண்ணாசாலையில் நிற்கிறேன். ஒற்றை ஆளாக ஆயுதமே இல்லாம நிற்கிறேன். தைரியமா இருந்தா என் மீது வைத்து பார்க்கட்டும்.
என்னை சரிக்கு சரியான ஆம்பளையாகத்தான் சீமான் பார்க்கிறார்... அதனால்தான் அரிவாளால் வெட்டுவேன் என்கிறார்.. நானும் அரிவாள் எடுக்கிறேன். நான் வன்முறையை கையில் எடுக்கவில்லை.
என் மீது கை வைக்கும் போது நான் என்ன பூப்பறிச்சுகிட்டா இருப்பேன்? என் தம்பிக சும்மா விட்டுருவாங்களா? நான் யாருன்னு தெரியாம விளையாடுற.. என் பின்னாடி பெரிய பல நூறு படையே இருக்கு.. இறக்கிவிட்டா அவ்வளவுதான். இவ்வாறு வீரலட்சுமி எச்சரித்தார்.












Click it and Unblock the Notifications