Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பீஸ்ட்டில் விஜய் பேசியதை.. நானே பேசி இருக்கேன்! அமித் ஷாவோடு கருத்து வேறுபாடா? அண்ணாமலை பரபர பதில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'பீஸ்ட்' படத்தில் விஜய் பேசிய வசனத்தை பல இடங்களில் நானே பேசி உள்ளேன் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசி உள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த சில தினங்களுக்கு முன் ஹிந்தி மொழிக்கு ஆதரவாக பேசினார். அதில், பள்ளி மாணவர்கள் ஹிந்தியை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஹிந்தி அடிப்படை அறிவு இருக்க வேண்டும்.

ஹிந்தி தேர்வுகளில் இந்தியா முழுக்க இருக்கும் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்று கூறினார். அது மட்டுமின்றி ஹிந்திதான் நம்முடைய அலுவல் மொழி. இந்தியை ஆங்கிலத்திற்கு மாற்றாக பயன்படுத்த வேண்டும். மாநில மொழிகளுக்கு மாற்றாக அல்ல ஆங்கிலத்திற்கு மாற்றாக இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமித் ஷா குறிப்பிட்டார்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இதற்கு நேற்று விளக்கம் அளித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, எந்தக் காரணத்திற்காகவும் ஹிந்தி மொழியைத் திணிப்பதை தமிழக பாஜக அனுமதிக்காது. ஹிந்தியால் நமக்கு பெருமையில்லை .அந்நிய மொழியான ஆங்கிலமும் , ஹிந்தியும் ஒன்றுதான் எனக்கு. ஹிந்தி எனக்கும் தெரியாது. பாஜக இந்தியை ஏற்றுக்கொள்ளாது என்பதை மிக தீர்க்கமாக சொல்வது எங்களது கடமை, என்று அண்ணாமலை குறிப்பிட்டார்.

அண்ணாமலை

அண்ணாமலை

இந்த நிலையில் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில், இந்தி குறித்து 'பீஸ்ட்' படத்தில் விஜய் பேசிய வசனத்தை பல இடங்களில் நானே பேசி உள்ளேன். அவர் படத்தில் பேசியதை நான் நிஜத்தில் பல முறை பேசி இருக்கிறேன். பீஸ்ட் படம் நன்றாக இருப்பதாக ரிவ்யூ பார்த்தேன். விஜய் படத்தில் பேசியது வைரலாக பரவிக்கொண்டு இருக்கிறது. இந்தி விவகாரத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா கருத்துடன் முரண்பாடு ஏதும் இல்லை.

அமித் ஷா

அமித் ஷா

அமித் ஷா இதில் அமைச்சர் என்ற முறையில் உள்துறை அமைச்சராக பேசி இருக்கிறார். குவாலிட்டி அடிப்படையில் எப்போதும் தமிழ்தான் நம்பர் 1. குவாண்டிட்டி அடிப்படையில் வேண்டுமானாலும் இந்தி பெரிதாக இருக்கலாம். திமுக அரசு தமிழை வளர்க்க என்ன செய்தது என்பது குறித்து அறிக்கை வெளியிட வேண்டும். 25 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தது திமுகதான்.

தமிழுக்காக என்ன செய்தார்கள்

தமிழுக்காக என்ன செய்தார்கள்

அவர்கள் தமிழுக்காக என்ன செய்தார்கள். தமிழ் மெல்ல மெல்ல செத்துக்கொண்டு இருக்கின்றது. தமிழ் மொழியை வளர்க்க 20 ஆண்டுகால இலக்கு நிர்ணயம் செய்ய வேண்டும். தமிழை சர்வதேச அளவில் கொண்டு செல்ல வேண்டும். ஏ.ஆர்.ரகுமான் பேசியது தவறு இல்லை. அவரின் ஆசைதான் எங்களின் ஆசையும். தமிழை வைத்து வியாபாரம் செய்ய கூடாது. அதுதானே நடக்கிறது.

ஏ.ஆர் ரகுமான்

ஏ.ஆர் ரகுமான்

ஏ.ஆர் ரகுமான் தமிழ் அன்னை புகைப்படத்தை வெளியிட்டதை பார்த்தேன். அவர் அப்படி செய்தது அவரின் கருத்து சுதந்திரம். இந்தி தேவை என்றால் மட்டும் படியுங்கள் என்று மட்டுமே நான் சொல்கிறேன். இங்கு இந்தி திணிக்கப்படவில்லை. இந்தி தேர்வுகளில் எப்போதும் தமிழர்கள்தான் முதலில் இருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும் என்று அண்ணாமலை தனது பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.

என்ன வசனம்

என்ன வசனம்

நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படத்தில், தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நடிகர் விஜய், ஒரு கட்டத்தில் சும்மா இந்தில உனக்கு டிரான்ஸ்லேட் பண்ண முடியாது, வேணும்னா தமிழ் கத்துகிட்டு வா என சொல்லும் காட்சிகளில் இந்தி திணிப்புக்கு எதிராக பேசி உள்ளார். ஹிந்திக்கு எதிராக விஜய் குரல் கொடுத்ததாக கூறி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+