உங்களை நம்பியே கட்சி தொடங்கி இருக்கிறேன்.. வலிமையான கட்டமைப்பு தேவை.. தவெக தலைவர் விஜய் பேச்சு!
சென்னை: உங்கள் அனைவரையும் நம்பியே கட்சி தொடங்கி இருக்கிறேன் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார். வலிமையான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று புதிய நிர்வாகிகளிடம் விஜய் கூறியதோடு, மாவட்டச் செயலாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள் கட்சி நலனுக்காக செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கினார். அதன்பின் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் தவெக மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து களத்திற்கு வராமல் அறிக்கை வாயிலாகவே அரசியலில் விஜய் ஈடுபட்டு வந்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை எதிர்த்து போராடியவர்களை விஜய் சந்தித்தார்.

இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றார். இந்த கூட்டத்தின் முடிவில் மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியானது.
அதனை உறுதிபடுத்தும் வகையில் மாவட்டப் பொறுப்பாளர்களுடன் விஜய் தனியே ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்திற்கான மாவட்டச் செயலாளர்களை நியமித்து விஜய் அறிவிப்பு வெளியிட்டார். அதில் நிர்வாக வசதிக்காக தவெக 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது தெரிய வந்தது. அதில் முதற்கட்டமாக 19 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு விஜய்-ன் உருவம் பொறித்த வெள்ளி நாணயம் வழங்கி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நிர்வாகிகள் மத்தியில் விஜய் பேசுகையில், தமிழக வெற்றிக் கழகத்தில் வலிமையான கட்டமைப்பை உருவக்க வேண்டும். உங்களை நம்பி தான் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி தொடங்கி இருக்கிறேன்.
2026 சட்டமன்றத் தேர்தல் தான் நமது இலக்கு. நிர்வாகிகள் அனைவரும் எந்த பிரச்சனையும் இல்லாமல் செயல்பட வேண்டும். அதேபோல் மாவட்டச் செயலாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவரும் கட்சி நலனுக்காக செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் முதலாமாண்டு நிறைவு விழாவில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்-ன் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்! -
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
"விஜய் ஜெயித்ததும் மாறிய கோடம்பாக்கம் அரசியல்?" லாரன்ஸ் சர்ச்சையில் கொளுத்தி போட்ட ப்ளூ சட்டை மாறன் -
தமிழக அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை.. பட்ஜெட் வரை அடக்கமா இருங்க.. இல்லைன்னா காலி! -
விஜய்யின் அரசியல் எப்படி இருக்கு? ஒரு வார்த்தையில் ரஜினி ஸ்டைலில் பதில் சொன்ன லதா.. இப்படி சொல்லிட்டாங்களே? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
உதயநிதி வட்டத்தை காலி செய்யும் விஜய்.. ரெடியான மெகா பிளான்.. முதல் தூண்டிலே திமிங்கலத்திற்கு! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நாளை விசாரணை! என்ன நடக்கும்? -
சில நாய்களுக்கு நான்வெஜ்தான் பிடிக்கும்.. ராகவா லாரன்ஸ் பேச்சால் வெடித்த சர்ச்சை! -
அவர்கள் தற்குறி அல்ல.. தவெகவின் அம்புக்குறி.. விஜய் ஆட்சி மீது பொறாமையால் விமர்சனம்.. லாரன்ஸ் பேட்டி











Click it and Unblock the Notifications