தமிழ்நாடு மக்களுக்காக அவமானத்தை எதிர்கொள்ளவும் ரெடியாகிதான் கர்நாடகா செல்ல முடிவு செய்தேன்- விஜய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், மேகதாது அணை கட்டும் விவகாரம் மற்றும் காவிரி நீர் பங்கீடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் அவையில் பெரும் காரசார விவாதத்தை ஏற்படுத்தியது. இதற்கு முதல்வர் விஜய் உடனடியாக பதில் அளித்தார்.

தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? - உதயநிதி கேள்வி

சட்டப்பேரவையில் மேகதாது அணை தொடர்பாகப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் அரசு அமைந்த பிறகு, மேகதாது அண கட்டும் திட்டத்தில் இதுவரை இல்லாத வேகத்தில் கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது. காவிரி உரிமை விவகாரத்தில் கர்நாடகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டக் கூட தவெக அரசு மறுத்து வருகிறது" என்று குற்றம் சாட்டினார்.

Mekedatu amp amp Cauvery Row in TN Assembly Udhayanidhi Stalin Raises Questions CM Vijay Responds

தொடர்ந்து விவசாயிகள் விவகாரம் குறித்துப் பேசிய அவர், "தேர்தல் வாக்குறுதியில் விவசாயிகளுக்கு முழு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறிவிட்டு, இப்போது அரைகுறையாகக் கடனைத் தள்ளுபடி செய்தது ஏன்?" எனத் கேள்வி எழுப்பினார்.

அப்போது பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான கேள்வியை கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

அரசியல் செய்யும் எண்ணம் துளி கூட இல்லை - முதல்வர் விஜய் பதில்

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் பேச்சைத் தொடர்ந்து, காவிரி மற்றும் மேகதாது விவகாரம் குறித்து முதலமைச்சர் விஜய் பேரவையில் விரிவான விளக்கமளித்தார்.

முதல்வர் விஜய் பேசுகையில், "காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சில விவரங்களைக் கேட்டுள்ளார். காவிரி நீர் என்பது தமிழ்நாட்டு மக்களின் உணர்வு ரீதியான ஒன்று. அதை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் துளிக்கூட நமது அரசுக்கு இல்லை. அதற்கான அவசியமும் நமக்குக் கிடையாது" என்று திட்டவட்டமாகக் கூறினார்.

மேலும் தொடர்ந்த அவர், "மேகதாது விவகாரத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம். அந்தத் தீர்மானத்தை நேர்முகக் கடிதமாகப் பிரதமரிடமும் நேரடியாக வழங்கியுள்ளோம். தற்போதைய உலக சூழலில், பகை நாடுகளே தங்கள் எல்லை மற்றும் தண்ணீர் பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்கின்றன. அப்படியிருக்கும் போது, நாம் ஏன் பக்கத்து மாநிலமான கர்நாடகாவுடன் பேசிப் பிரச்சினையைத் தீர்க்கக் கூடாது என்று யோசித்தேன்."

"அதற்காகவே கர்நாடகாவுக்கு நேரில் சென்று அம்மாநில முதலமைச்சரைச் சந்தித்துப் பேசலாம் என்று Attempt செய்ய நினைத்தேன். அப்படி ஒரு மாநிலங்களுக்கு இடையேயான சுமுகமான பயணத்தைப் பற்றி முதலில் யோசித்ததே நான்தான். கர்நாடகாவுக்குச் சென்று நேரில் பேச்சுவார்த்தை நடத்தி, இந்தப் பிரச்சினையை நேர்மறையான வழியில் தீர்க்கலாம் என்று கருதினேன்..

கர்நாடகா உடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி எடுத்தது நான்தான். ஏதேனும் தீர்வு கிடைக்காதா? என்ற எண்ணத்தில் அந்த முயற்சி எடுக்கப்பட்டது. அதில் அவமானம் ஏற்பட்ட வாய்ப்பு உள்ளது என சிலர் என்னிடம் தெரிவித்தனர். தமிழ்நாட்டு மக்களுக்காக, அவமானத்தை தாங்க நான் தயாராக இருக்கிறேன் என்று அவர்களிடம் தெரிவித்தேன்.. " என முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.

காவிரி நீர் உரிமை மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலனைக் காக்கத் தொடர்ந்து சட்டப்பூர்வமாகவும் தூதரக ரீதியாகவும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+