கட்சி பதவியை உதறியாச்சு.. அடுத்து என்ன? தோப்பு வெங்கடாசலம் பரபர!
Recommended Video
சென்னை: கட்சிப்பதவியில் இருந்து விலகியுள்ள எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பது குறித்து கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சரும், பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாகவும் இருப்பவர் தோப்பு வெங்கடாசலம். இவருக்கும் அமைச்சர் கே.சி.கருப்பணனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது.
அண்மையில் அமைச்சர் கருப்பண்ணன் திமுகவுக்கும் அமமுகவுக்கும்தான் வேலை செய்கிறார் என கூறி குண்டை தூக்கி போட்டார் தோப்பு வெங்கடாசலம். இது கட்சிக்குள் பூதாகரமானது.

நேற்று ராஜினாமா
தோப்பு வெங்கடாசலத்தின் பேச்சால் அதிமுக தலைமை மட்டுமின்றி தொண்டர்களும் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் தன்னிடம் இருந்த கட்சி பதவியான அம்மா பேரவை மாநில இணை செயலாளர் பொறுப்பில் இருந்து தோப்பு வெங்கடாசலம் நேற்று விலகினார்.

பொறுமையா இருங்கள்
இதற்கான ராஜினாமா கடிதத்தை எம்.எல்.ஏ.தோப்பு வெங்கடாச்சலம் சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திது வழங்கினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தோப்பு வெங்கடாசலம் எனது சொந்த முடிவு என்று கூறிவிட்டு சென்றார்.

பதவி அவசியம் இல்லை
இந்நிலையில் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் கட்சிக்கு உழைக்க பதவி ஒன்றும் அவசியம் இல்லை என்று கூறியுள்ளார். அதிமுக தொண்டனாக இருந்து பணியாற்றுவேன் என்றும் தோப்பு வெங்கடாசலம் கூறியுள்ளார்.

விலகல் - பரபரப்பு
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி பெரும் சரிவை சந்திக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்தது. இந்நிலையில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் கட்சி பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications