பிரச்சனை வந்தா பார்த்துக்குறேன்! தப்பான இடத்துல சீண்டிய எடப்பாடி! தலைக்கு மேல் 3 "கன்னி வெடி".. ஷாக்
சென்னை: அதிமுகவிற்கு எந்த பிரச்சனை வந்தாலும் அதை நான் பார்த்துகிறேன் என்று எடப்பாடி பழனிச்சாமி நேற்று நடந்த மீட்டிங்கில் துணிச்சலாக கூறி இருக்கிறாராம். அவர் இப்படி கூறுவதற்கு பின் நிறைய காரணங்கள் உள்ளன.
பொதுவாக மாஜி அமைச்சர்கள், எம்எல்ஏக்களை, முன்னாள் முதல்வர்களை கைது செய்ய ஆளுநர் அனுமதி தேவை. சில வழக்குகளில் நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

ஆனால் தமிழ்நாட்டில் இதுவரை எடப்பாடி பழனிசாமி தொடர்பான சில வழக்குகளில் நடவடிக்கை எடுக்க ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல் மாஜி அமைச்சர்கள் பலரின் மீதான வழக்குகளில் இன்னும் தமிழ்நாடு போலீசார் நடவடிக்கை எடுக்க ஆளுநர் தரப்பு அனுமதி கொடுக்கவில்லை.
முக்கியமாக கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி நேரடியாக குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளார். அவருக்கு எதிராக நேரடியாக சயான் வாக்குமூலம் கொடுத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி சொல்லித்தான் இதை எல்லாம் செய்ததாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இது போக வரிசையாக அதிமுகவின் டாப் மாஜி அமைச்சர்களுக்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கு, டெண்டர் முறைகேடு வழக்கு, லஞ்ச வழக்கு என்று பல்வேறு வழக்குகள் உள்ளன. இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் பல்வேறு டெண்டர் முறைகேடு வழக்குகள் உள்ளன.
இந்த வழக்குகள் எல்லாம் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் தொடுக்கப்பட்டு உள்ள வழக்குகள் ஆகும். அதேபோல் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கோடநாடு வழக்கு தமிழ்நாடு போலீஸ் மூலம் தொடுக்கப்பட்ட வழக்குகள் ஆகும்.
இது போக அதிமுகவின் டாப் மாஜிகளுக்கு எதிராக வருமான வரித்துறை வழக்குகள் உள்ளன. அதேபோல் அமலாக்கத்துறை வழக்குகளும் உள்ளன. இந்த வழக்குகள் எல்லாம் டெல்லி கண்ட்ரோலில் உள்ள வழக்குகள்.
நடவடிக்கை: இப்போது ஆளுநர் நினைத்தால் தமிழ்நாடு அரசின் வழக்குகளில் ஆக்சன் எடுக்க அனுமதி கொடுக்க முடியும். அல்லது டெல்லி நேரடியாக இறங்கி எடப்பாடி மற்றும் மாஜி அமைச்சர்கள் எல்லோருக்கும் எதிராக ஆக்சன் எடுக்க முடியும்.
முக்கியமாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மட்டும் டெண்டர் வழக்கு + சொத்து முறைகேடு வழக்கு + கோடநாடு வழக்கு என்று 3 கத்திகள் தொங்கிக்கொண்டு இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி துணிச்சலாக அதிமுக - பாஜக கூட்டணியை முறித்துள்ளார். பாஜக கூட்டணியை முறித்ததால் இந்த வழக்குகளில் இருந்து இத்தனை காலம் தப்பித்த அதிமுக டாப் லீடர்கள் மீண்டும் விசாரணைக்கு ஆளாகும் வாய்ப்புகள் உள்ளன.
இந்த வழக்குகள் எல்லாம் கன்னிவெடி போல எடப்பாடி காலில் இத்தனை காலம் கிடந்தன. இந்த கன்னிவெடிகள் வரும் நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக வெடிக்கும் அபாயம் உள்ளது. ஆனால் இது எல்லாம் தெரிந்துதான் எடப்பாடி பழனிசாமி இந்த கூட்டணி முறிவு முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
நேற்று நடந்த அதிமுக கூட்டத்தில் கூட, நான் எந்த பிரச்சினையையும் சந்திக்க தயார். பாஜகவுடன் இன்றைக்கு மட்டுமல்ல, இனி என்றைக்குமே கூட்டணி கிடையாது.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி. என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம். கூட்டணி முறிவால் எந்த பிரச்சினை வந்தாலும் சந்திக்க தயார் என்று எடப்பாடி பழனிசாமி நேற்று மீட்டிங்கில் துணிச்சலாக கூறியதாக தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications