கட்சி பெயர் CSK.. 2026 சட்டசபை தேர்தலில் கட்டாயம் போட்டியாம்.. காமெடி நடிகர் கூல் சுரேஷ் அலப்பறை
சென்னை: காமெடி நடிகர் கூல் சுரேஷ் சிஎஸ்கே என்ற பெயரில் கட்சியை தொடங்க உள்ளதாகவும், 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் அலப்பறையை கிளப்பி உள்ளார்.
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர், வில்லன், காமெடியன் போன்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கூல் சுரேஷ். தற்போது படவாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

மேலும் அவர் யூடியூப் தொடங்கி படத்தின் ரிவ்யூ மற்றும் இதுபோல் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். கடந்த ஆண்டு மன்சூர் அலிகானின், 'சரக்கு' படத்தின் இசை மற்றும் திரை முன்னோட்ட விழாவில் தொகுப்பாளினி கழுத்தில் மாலை அணிவித்து சர்ச்சையை கிளப்பினார்.
மேலும் ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும்போதும் அதனை ப்ரோமோஷன் செய்வதாக கூறி அலப்பறையை கிப்பி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில் தான் லோக்சபா தேர்தலில் அவர் திருவண்ணாமலை பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்தார்.
இந்நிலையில் தான் இன்று லோக்சபா தேர்தலில் கூல் சுரேஷ் வாக்களித்தார். அதன்பிறகு அவர் புதிய கட்சியை தொடங்க உள்ளதாக அறிவித்தார். அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த வேளையில் கூல் சுரேஷ் புதிய கட்சி தொடங்கி வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார்.
இதுபற்றி கூல் சுரேஷ் இன்று கூறுகையில், ‛‛CSK - Cool Suresh katchi என்ற பெயரில் கட்சியை தொடங்க உள்ளேன். இந்த கட்சி விரைவில் பதிவு செய்யப்படும். அதன்பிறகு 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் கூல் சுரேஷ் கட்சி போட்டியிடும். ஒருவேளை தேர்தலில் போட்டியிடாவிட்டால் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு தெரிவிப்போம்'' என்றார்.
தமிழகத்தை பொறுத்தவரை நடிகர், நடிகைகள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிது அல்ல. அதிமுகவை உருவாக்கிய முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் திரைத்துறையில் இருந்து வந்தவர்கள் தான். இவர்கள் தவிர பல நடிகர், நடிகைகள் அரசியல் கட்சியி்ல செயல்பட்டு வருகின்றனர்.
நடிகர் சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்துவிட்டார். நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி திமுக கூட்டணியில் சேர்ந்துள்ளார். நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை கடந்த பிப்ரவரியில் தொடங்கினார். விஜயின் கட்சி இந்த லோக்சபா தேர்தலில் களமிறங்காத நிலையில் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளது. அந்த வரிசையில் நடிகர் கூல் சுரேசும் சிஎஸ்கே என்ற பெயரில் கட்சி தொடங்குவதாக இன்று அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications