Ravi Mohan: விவாகரத்து கிடைக்கும் வரை நான் நடிக்க மாட்டேன்! என்னை சீண்டாதீர்- ரவி மோகன் பரபரப்பு
சென்னை: எனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை நான் நடிக்க மாட்டேன், எனது தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்து விடுபடும் வரை என் படங்கள் தியேட்டருக்கு வராது என ரவி மோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஆழ்வார்பேட்டையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: நான் பேசாமல் இருந்தது முட்டாள்தனம் என நினைக்கிறேன். நான் எப்போதும் விட்டுக் கொடுப்பவன். ஆனால் சாது மிரண்டால் காடு கொள்ளாது. என்னை சீண்ட நினைக்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்றை சொல்கிறேன், என் ஆபிஸுக்கு வந்து பஞ்சிங் பேக்காக யூஸ் செய்துக் கொள்ளுங்கள்.

என் படம் இனி தியேட்டரில் ரிலீஸாகாது. என்னால் நடிக்க முடியவில்லை, எனக்கு நடந்த அவமானங்களால் என்னால் நடிக்க முடியவில்லை. எனது தனிப்பட்ட வாழ்க்கை சரியாகும் வரை, சைபர் புல்லியிங் சரியாகும் வரை நான் நடிக்க மாட்டேன்.
கெனிஷாவை காலி செய்து சென்னையை விட்டே அனுப்பிவிட்டீர்கள் சாதுவாக இருந்த என்னை சிலர் சீண்ட முயற்சிக்கிறார்கள். என் குழந்தைகளை என்னிடம் காட்டுவதே இல்லை. நான் பெண்களை மதிக்காதவன் என்கிறார்கள்.
என் படங்களில் பெண்களின் உரிமை குறித்து பேசியுள்ளேன். ஒரே நாளில் என்னால் விவாகரத்து செய்திருக்க முடியும். எனது பிள்ளைகளுக்காக அமைதியாக இருந்தேன். நான் பார்க்காத ஹீரோயினா, என் வேலையே அழகான பெண்களுடன் நடிப்பதுதான். ஏற்கெனவே என் மீது பல கோடி கடன், வழக்குகள் உள்ளன. ஆனாலும் நான் சிரித்தபடிதான் இருந்தேன்.
சினிமாத் துறையில் என் மீது எந்த கருப்புப்புள்ளியும் இல்லை. குழந்தைகளை பார்க்கவிடாததால் என் கையை அறுத்துக் கொண்டேன். அவர்கள் எல்லோரையும் முடித்துவிட்டுதான் நான் செல்வேன், சந்தோஷமாக சிரித்துக் கொண்டே செல்வேன். அவர்களை பற்றி அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளது. ஏஐ மூலம் எடிட் செய்து எனக்கு எதிராக வதந்தி பரப்புகிறார்கள். சைபர் துன்புறுத்தலால் பலர் உயிரிழந்துள்ளனர்.
எனக்கு நடந்தது பிளாக் மெயில் திருமணம், கையை அறுத்துக் கொண்டு என்னை மிரட்டி திருமணம் செய்து கொண்டார். இவ்வாறு ரவி மோகன், ஆர்த்தி பெயரை சொல்லாமல் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நடிகர் ரவி மோகன் 2024-ல் தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக அறிவித்ததிலிருந்து, அவருக்கும் கெனிஷாவுக்கும் காதல் இருப்பதாகப் பரவலாகப் பேசப்பட்டது. இருவரும் தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளிலும் ஒன்றாகப் பங்கேற்று வந்தனர்.
அண்மையில் தரம்சாலாவில் நடந்த கோயில் விழாவில் அவர்கள் இணைந்திருந்தது பேசுபொருளானது. இதனால், ஆர்த்தி ஆதரவாளர்களிடமிருந்து கெனிஷாவுக்கு சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து கெனிஷா, ரவியை விட்டு செல்வதாக ஒரு வீடியோ போட்டிருக்கிறார். மேலும் சென்னையை விட்டே செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications