ரஜினி கட்சி ஆரம்பிக்க ரெடி ஆகிட்டாரு.. உஷாரு.. தேசிய அளவில் வைரலான #மன்னிப்பு_கேட்க_முடியாது!
பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்தின் கருத்தை தொடர்ந்து தற்போது தேசிய அளவில் #மன்னிப்பு_கேட்க_முடியாது என்ற டேக் வைரலாகி வருகிறது.
Recommended Video
சென்னை: பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்தின் கருத்தை தொடர்ந்து தற்போது தேசிய அளவில் #மன்னிப்பு_கேட்க_முடியாது என்ற டேக் வைரலாகி வருகிறது.
பெரியார் குறித்து துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையாகி உள்ளது. ரஜினியின் கருத்துக்கு எதிராக திராவிட கழகம், திராவிட விடுதலை கழகம் உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடுத்து போராடி வருகிறது.
இந்த சர்ச்சையை தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினி காந்த் விளக்கம் அளித்துள்ளார். அதில், பெரியார் பற்றி நான் சொன்னதற்கு மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள். சாரி. பெரியார் குறித்த கருத்துக்கு நான் மன்னிப்பு கேட்க முடியாது.பெரியார் குறித்து நான் பேசியது தவறானது கிடையாது.

டேக் வைரல்
ரஜினியின் இந்த கருத்தை தொடர்ந்து தற்போது தேசிய அளவில் #மன்னிப்பு_கேட்க_முடியாது என்ற டேக் வைரலாகி வருகிறது. ரஜினிக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் தொடர்ந்து பல்வேறு டிவிட்களை செய்து வருகிறார்கள். அதேபோல் பாஜகவை சேர்ந்தவர்களும் ரஜினிக்கு ஆதரவாக தொடர்ந்து டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
|
கெட்ட பய
மன்னிப்பா முடியாது.. கெட்ட பய சார் இந்த காளி!, என்று இவர் குறிப்பிட்டுள்ளார்.
|
மன நல மருத்துவர்
#மன்னிப்பு_கேட்க_முடியாது இதை விட தெளிவாக, தைரியமாக யாராலயும் பேச முடியாது.. இதனால்தான் அவர் தலைவர்.. யாராவது அவரை இப்போதும் விமர்சனம் செய்தால், அவர்கள் உடனடியாக மனநல மருத்துவரை அணுக வேண்டும், என்று இவர் டிவிட் செய்துள்ளார்.
|
பன்ச்
நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி.. மன்னிப்பு கேட்க முடியாது.
|
சூப்பர் தலைவர்
சூப்பர் தலைவா அடுத்த ஓட்டு உனக்குத்தான்.. என்று இவர் கூறியுள்ளார்.
|
தர்பார்
தலைவன் வேற ரகம், பாத்து உஷாரு 🔥🔥🔥 #மன்னிப்பு_கேட்க_முடியாது. இப்படி பலரும் ரஜினியின் பஞ்ச் டயலாக்கை டிவிட் செய்து வருகிறார்கள்.
|
பாஜக எதிர்ப்பு
ஆனால் இந்த ரஜினி ரசிகர் மட்டும் பாஜகவை எதிர்த்துள்ளனர். அவர் தனது டிவிட்டில் , நாள் செல்ல செல்ல, இப்ப சந்தோசப்படும் பா .ஜ .க ஆளுங்க முழிக்க வேண்டி வரும்..மீண்டும் சொல்கிறேன் இது ஆன்மீக அரசியல், மத அரசியல் அல்ல., என்றுள்ளார்.
|
ரெடி ஆகிட்டாரு
முன்ன மாதிரி நெருக்கடி குடுத்து சொன்ன கருத்துல இருந்து பின் வாங்க வைக்கலாம்னு பாத்தாங்க, முடியல. கட்சி ஆரம்பிக்க ரெடி ஆகிட்டாரு, என்று இவர் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications