இன்னொன்று சொல்லுவாங்க.. அது தப்பா போயிடும்.. வேண்டாம்.. ஸ்டாலின் பற்றிய கேள்விக்கு முதல்வர் கிண்டல்!
திமுக தலைவர் ஸ்டாலின் பற்றிய கேள்விக்கு முதல்வர் பழனிசாமி அளித்த பதில் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் பற்றிய கேள்விக்கு முதல்வர் பழனிசாமி அளித்த பதில் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
தமிழக அதிமுக அரசு இன்று மிக முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டது. சிவகாசியை மாநகராட்சியாக அறிவிக்க ஏற்பாடுகள் செய்யப்படுவதாக முதல்வர் இன்று அறிவிப்பு வெளியிட்டார். அதோடு தமிழகத்தில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடங்க 11 இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா ஒவ்வொரு மாவட்டங்களாக நடந்து வருகிறது. இன்று விருதுநகரில் இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் பழனிச்சாமி கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

என்ன பேட்டி
இந்த பேட்டியில் நடிகர் கமல்ஹாசன் குறித்த கேள்விக்கு, நடிகர் கமலுக்கு அரசியல் குறித்தும், நிர்வாகம் குறித்தும் ஒன்றும் தெரியாது யாரோ எழுதிக் கொடுப்பதை அவர் அப்படியே படிக்கிறார். அவருக்கு தமிழக அரசில் என்ன நடக்கிறது என்றே தெரியாது. நாங்கள் நல்ல ஆட்சிக்காக எத்தனை விருதுகள் வாங்கி இருக்கிறோம் என்று தெரியுமா? கமலுக்கு என்னதான் தெரியும்? சினிமா மட்டும்தான் கமலுக்கு தெரியும்.

காங்கிரஸ்தான்
என்பிஆரை கொண்டு வந்தது காங்கிரஸ். என்பிஆரை தமிழகத்தில் அமல்படுத்தியது திமுகதான். ஆனால் எங்கள் மீது பழியை போடுகிறார்கள். எதிர்கட்சி இனியும் மக்களை ஏமாற்ற முடியாது. என்பிஆர் சட்டத்தில் கூடுதலாக 3 அம்சங்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் அதை நாங்கள் நடைமுறை படுத்த மாட்டோம், என்று குறிப்பிட்டார்.

ஸ்டாலின் கேள்வி
அதன்பின் ஸ்டாலின் குறித்த கேள்விக்கு முதல்வர் பழனிசாமி அளித்த பதிலில், விவசாய மண் குறித்த வாசனை கூட ஸ்டாலினுக்கு என்ன வென்று தெரியாது. அவருக்கு விவசாய மண் வாசனை கூட என்னவென்று தெரியாது. இந்த கேள்விக்கு நான் வேறு பதில் சொல்ல முடியும். இதற்கு கிராமத்தில் ஒரு உவமை சொல்லுவாங்க, அது தப்பா போயிடும்.. வேண்டாம்.

உவமை தெரியும்
எனக்கு நிறைய உவமை தெரியும். நான் கிராமத்தில் இருந்து பிறந்து வளர்ந்தேன். நான் பிறந்ததில் இருந்தே விவசாயி.எனக்கு விவசாயம்தான் தொழில். அதற்குத்தான் வருமான வரி கட்டி இருக்கிறேன். எம்எல்ஏவாக இருந்த போது ஆதார்கான் வருமான என்னவென்று காட்டி இருக்கிறேன். இதை விட வேறு என்ன ஆதாரம் இருக்க முடியும், என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். முன்னதாக முதல்வர் பழனிசாமிக்கு விவசாயம் குறித்து ஒன்றும் தெரியாது என்று ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications