திரிஷா எனக்கு நன்றிதான் சொல்லனும்! தமிழ்நாடே என் பக்கம்..சர்ச்சை பேச்சுக்கு மன்சூர் அலிகான் விளக்கம்
சென்னை: இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான், "திரிஷாவை நான் பாராட்டி பேசியதற்காக அவர் எனக்கு நன்றிதான் சொல்ல வேண்டும் என்றும் த்ரிஷா குறித்து நான் தவறாகவே பேசவில்லை என்றும் கூறினார்.
நடிகர் மன்சூர் அலிகான் அண்மையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் மன்சூர் அலிகான், த்ரிஷா குறித்து மிகவும் மோசமான வகையில் பேசியிருந்தார். இது குறித்து நடிகை த்ரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், மன்சூர் அலிகான் என்னைப்பற்றி மிகவும் மோசமான மற்றும் அருவருப்பான முறையில் பேசும் வீடியோ குறித்து நான் கேள்விப்பட்டேன்.

அவரை போன்றவருடன் இனிமேல் ஒருபோதும் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன். மன்சூர் அலிகானை போன்றவர்கள் மனித குலத்திற்கே கெட்டப்பெயரை கொண்டு வருகின்றனர் என்று தெரிவித்திருந்தார். நடிகை திரிஷாவுக்கு ஆதரவாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை மாளவிகா மோகனன், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர்.
மன்சூர் அலிகான் பேட்டி: மன்சூர் அலிகான் த்ரிஷாவுடன் சேர்த்து குஷ்புவையும் பேசியிருந்தார். இது தொடர்பாக கூறியிருந்த குஷ்பு, மன்சூர் அலிகான் மீது தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். எனது சீனியரிடம் பேசியுள்ளேன். அவரை சும்மா விடக் கூடாது என போட்டிருந்தார். இந்த நிலையில் இதனிடையே நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
மன்சூர் அலிகான் மீது சட்டப்பிரிவு 509ன் கீழ் மற்றும் இதர தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் மன்சூர் அலிகான் விரைவில் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்பட்டது. அதேபோல், நடிகர் சங்கமும் மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி அளித்தார்.
மன்னிப்பு கேட்பவன் இல்லை: நடிகர் மன்சூர் அலிகான் கூறியதாவது:- கதாயநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது குறித்துதான் பேசினேன். நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறை செய்துள்ளது. நான் நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் என்பது அவர்களுக்கு தெரியும். என்னிடம் கேள்வி எதையும் நடிகர் சங்கம் கேட்கவில்லை. போனிலும் பேசவில்லை. நோட்டீஸ் அனுப்பி இந்த மாதிரி விளக்கம் கொடுங்க என்று கேட்க வேண்டும். ஆனால் செய்யவில்லை.
ஒரு சங்கம் நடத்துகிறவர்கள் இப்படி செய்யலாமா.. நான்கு மணி நேரம் நடிகர் சங்கத்திற்கு நான் டைம் கொடுக்கிறேன். நான் மன்னிப்பு கேட்பவன் இல்லை. நடிகர் சங்கம் மிகப்பெரிய இமாலய தவறை செய்துள்ளது. நான் அமைதி காத்துக் கொண்டு இருக்கிறேன். எரிமலையாக குமுறினேன் என்றால் எல்லாம் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று கோவணத்தை உருவி விட்றுவேன்.. எல்லாம் ஓடிப்போய்விடுவீர்கள்..
ரேப் சீன் என்றால் என்ன?: என்னை பலிகடா ஆக்கிவிட்டு நல்ல பெயரை எடுக்க பார்க்கிறீர்களா? இது என்ன நியாயம். நடிகர் சங்கம் என்று ஒரு சங்கம் இருந்தால் குறைந்தபட்சம் விளக்கம் கேட்க வேண்டாமா? மக்களுக்கு என்னைப்பற்றி தெரியும். நான் யார் என்பது அவர்களுக்கு தெரியும். பொன்னு, மாப்பிள்ளை மாதிரி எல்லா பேப்பரிலும் போட்டு இருக்கிறார்கள். அந்த அம்மாவை (திரிஷா) விட நான் நல்லாகத்தான்
இதில் இருக்கிறேன்.
ஹாலிவுட் வரைக்கும் போய்விட்டது. அந்த வகையில் எனக்கு சந்தோஷம் தான்.. நடிகர் சங்கம் விசாரணை செய்யாமல் செய்தது இமாலய தவறு. சினிமாவில் ரேப் சீன் என்றால் என்ன.. நிஜமாகவா ரேப் செய்கிறார்கள்?.. சினிமாவில் கொலை செய்கிறார்கள் என்றால் நிஜமாகவா கொலை செய்கிறார்கள்.? சினிமாவில் ரேப் என்றால் நிஜமாக செய்வதா? அறிவு இருக்கிறதா?
தவறாகவே பேசவில்லை: சங்கத்திற்கு அறிவு இல்லையா? தமிழ்நாடே என் பக்கம் உள்ளது. இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன். எந்த ஆணையமும் வரட்டும். அதைப்பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை. நான் கலைஞர்களை இழுக்காக பேசுகிறவன் இல்லை. அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடியவன். திரிஷாவை நான் பாராட்டி பேசியதற்காக அவர் எனக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். த்ரிஷா குறித்து நான் தவறாகவே பேசவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications