ஐயா.. டேய் தமிழ் இயக்குனர்களா.. தர்பார் படத்தை பார்த்து கடுப்பான ஐஏஎஸ் அலெக்ஸ்.. செம அட்வைஸ்!
தர்பார் படத்தை பார்த்து கடுப்பான பிரபல ஐஏஎஸ் அதிகாரி அலெக்ஸ் பால் மேனன், அது குறித்து டிவிட் செய்து விமர்சித்துள்ளார்.
சென்னை: தர்பார் படத்தை பார்த்து கடுப்பான பிரபல ஐஏஎஸ் அதிகாரி அலெக்ஸ் பால் மேனன், அது குறித்து டிவிட் செய்து விமர்சித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படம் தற்போது வெளியாகி உள்ளது. தர்பார் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மும்பை போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் நேற்றுதான் வெளியானது.
எப்போதும் ரஜினி படத்திற்கு இருப்பது போல இந்த படத்திற்கும் பெரிய அளவில் ஓப்பனிங் இருந்தது. பொங்கலை முன்னிட்டு படம் வெளியாகி இருப்பதால், படத்திற்கு பெரிய அளவில் வசூல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தர்பார் படம்
இந்த நிலையில் தர்பார் படத்தை பார்த்துவிட்டு ஐஏஎஸ் அதிகாரி அலெக்ஸ் பால் மேனன் டிவிட் செய்துள்ளார். அதில் , ஐயா, டேய் தமிழ் இயக்குனர்களா... இனிமே இந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் பின்புலம் வச்சி எந்த படமும் எடுக்காதீங்க ஐயா. உங்க லாஜிக் ஓட்டைல எங்க மொத்த மூளையும் விழுந்து கிடக்குது, என்று குறிப்பிட்டுள்ளார்.
|
யார் இவர்
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2012ல் கடத்தப்பட்டு, கஸ்டடியில் வைக்கப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டார். இவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அட
இந்த நிலையில் இவர் தர்பார் படம் குறித்து இப்படி விமர்சனம் செய்து இருப்பது பெரிய வைரலாகி உள்ளது. பலரும் அவரின் கமெண்டிற்கு பதில் அளித்து வருகிறார்கள். என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டிங்க, என்று நிறைய பேர் இந்த டிவிட்டிற்கு சிரிக்கும் ஸ்மைலிகளை அளித்துள்ளனர்.

தர்பார் விமர்சனம்
தர்பார் படம் விமர்சன ரீதியாக நிறைய மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. ரஜினி ரசிகர்கள் மட்டும் படத்தை புகழ்ந்து வருகிறார்கள். பொதுவான ரசிகர்கள் பலர் படம் அவ்வளவு சிறப்பாக எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்று கூறி வருகிறார்கள்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications