Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாஸ்டர்மைண்ட்.. தமிழ்நாட்டின் முக்கியமான ஐஏஎஸ் அதிகாரியை.. டெல்லிக்கு மாற்றிய அமித் ஷா! ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் முக்கியமான ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவரான அன்சுல் மிஸ்ரா திடீரென மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். சமீபத்தில் இவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (CDMA) முன்னாள் உறுப்பினர் செயலாளர் அன்சுல் மிஸ்ரா, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததற்காக அவருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பதற்காக தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

IAS Anshul Mishra

தற்போது தமிழ்நாடு அரசின் வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக இயக்குநராக இருக்கிறார் அன்சுல் மிஸ்ரா. அவர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டு டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அமித் ஷாவின் கீழ் உள்ள உள்துறை அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டின் முக்கியமான ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவரான அன்சுல் மிஸ்ரா பல்வேறு பொறுப்புகளை வகித்து இருக்கிறார். நீண்ட அனுபவம் கொண்ட இவர் பல துறைகளில் மாஸ்டார்மைண்டாக பார்க்கப்படுகிறார். அன்ஷுல் மிஸ்ரா, 2004 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த இந்திய நிர்வாக சேவை (IAS) அதிகாரி ஆவார், நகர்ப்புற நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களில் விரிவான அனுபவத்திற்காக அறியப்படுகிறார். தனது வாழ்க்கையில், அவர் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்:

திருவண்ணாமலை, மதுரை மாவட்ட ஆட்சியாராக இருந்துள்ளார். மதுரையில் கிரானைட் முறைகேடுகளை கையில் எடுத்ததால் 20 ஆண்டுகளுக்கு முன் இதேபோல் ஒரு முறை மத்திய அரசு பணிக்கு இவர் மாற்றப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது மீண்டும் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

வழக்கு பின்னணி

சிஎம்டிஏ வழக்குதான் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. சென்னை கோயம்பேட்டில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக லலிதாம்பாள் மற்றும் அவரது சகோதரர் விஸ்வநாதன் ஆகியோருக்கு சொந்தமான 17 சென்ட் நிலத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கடந்த 1983 ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. ஆனால் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படாததால் அந்த நிலத்தை தங்களிடமே திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும் என கடந்த 2003 ஆம் ஆண்டு லலிதாம்பாள் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரர்களின் கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவு பிறப்பித்தது. அதன்படி 10.5 சென்ட் நிலத்தை திருப்பிக் கொடுத்த நிலையில் 6.5 சென்ட் நிலத்தை சாலை விரிவாக்கத்திற்கு தேவை என கூறி, வீட்டு வசதி வாரியம் தன் வசம் வைத்துக் கொண்டது.

அந்த நிலமும் உரிய காரணத்திற்கு பயன்படுத்தாததால் திருப்பி தரக்கோரி அளிக்கப்பட்ட மனுவை பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் லலிதாம்பாள் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் மீண்டும் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த உயர்நீதிமன்றம் மனுதாரர்களை நேரில் அழைத்து விசாரித்து 2 மாதங்களில் சட்டப்படி தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (CDMA) முன்னாள் உறுப்பினர் செயலாளர் அன்சுல் மிஸ்ரா, மேற்கண்ட நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததற்காக அவருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+