அருண், கண்ணனை காப்பாற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் லாபி? விஜய்க்கு வந்த பிரஷர்! சென்னை கோட்டையில் என்ன நடக்குது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் பிரபல கிரானைட் தொழிலதிபர் மீது, சமீப நாட்களாகவே பாலியல் குற்றச்சாட்டுகள் வெடித்து கிளம்பி உள்ளன.. இந்நிலையில், இந்த விவகாரத்தை கையாண்ட விதம் தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகள் மீதும் புகார்கள் எழுந்துள்ளன.. இதையடுத்து, அதிகாரிகள் மீது அடுத்தகட்ட நடவடிக்கை பாயுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்து வரும்நிலையில், கோட்டையில் வேறு ஒரு முக்கியமான நகர்வு நடந்து வருகிறதாம். இதை பற்றி எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.

கிரானைட் தொழிலதிபர் மீது சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக எழுந்த போக்சோ குற்றச்சாட்டை கையாண்ட விதம் தொடர்பாக, காவல் துறை உயரதிகாரிகள் மீது புகார்கள் எழுந்துள்ளன.

Government IAS Lobby IPS Lobby

கிரானைட் தொழிலதிபர்

சம்பந்தப்பட்ட நபருக்கு எதிரான குற்ற வழக்கினை நீர்த்துப்போக வைக்க முயற்சித்த விவகாரங்களின் பின்னணியில் காவல் துறை உயரதிகாரிகள் அருண் மற்றும் கண்ணன் ஐ.பி.எஸ்.களை சமீபத்தில் காத்திருப்போர் பட்டியலில் வைத்தது தவெக அரசு. அதேபோல துணை ஆணையர் யாஸ்மின் மீதும் நடவடிக்கை பாய்ந்தது.

இந்த நிலையில். உயரதிகாரிகளை காப்பாற்ற ஐஏஎஸ். மற்றும் ஐபிஎஸ். லாபிகள் மறைமுகமாக முதல்வர் விஜய்க்கு அழுத்தம் தருவதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெயிட்டிங் லிஸ்ட்


குறிப்பாக, "தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு அடுத்தடுத்த நாட்களில் சஸ்பெண்ட், கைது என மேல் நடவடிக்கைகள் இந்த அதிகாரிகள் மீது பாயும் என்கிற சூழல்களே இருந்து வருகின்றன. ஏனெனில், போக்சோ குற்றவாளிகளை காப்பாற்ற இவர்கள் முயற்சித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் வலிமையானவை. போக்சோ வழக்கில் தொடர்புடைய யாரையும் பொதுவெளியில் மன்னிக்க யாரும் தயாராக இல்லை. அப்படி காப்பாற்றப்பட்டால் அது ஆளும் கட்சிக்குத்தான் சிக்கலை உருவாக்கும்...

அதனால் உயரதிகரிகளாக இருந்தாலும் அவர்கள் மீதான குற்றச்சாட்டு களுக்கு முகாந்திரம் இருந்தால் சரியான நேர்மையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அதுதான் ஆளும் கட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை வரும் என்கிற கருத்து முதல்வரிடம் சொல்லப்பட்டுள்ளது.

அழுத்தம் தருகிறார்களா?

இந்த நிலையில்தான், "உயரதிகாரிகள் மீது சஸ்பெண்ட் மற்றும் கைது நடவடிக்கை எடுத்தால் அது அதிகாரிகள் வர்க்கத்தில் எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும். இனி வரும் நாட்களில் அரசுக்கு சாதகமாகவோ அல்லது நியாயமாகவோ நடந்து கொள்ள மாட்டார்கள்.

சட்டத்தின் படி அவர்கள் நடந்தால் ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கும் எந்த நடவடிக்கையும் விரைந்து நடக்காது. இத்தகைய மனநிலை அதிகாரிகளிடம் வளர்ந்தால் அது ஆட்சியாளர்களுக்கு நல்லதில்லை" என்கிற ரீதியில் முதல்வர் விஜய்க்கு உயரதிகாரிகள் சிலர் அழுத்தம் தந்து வருகின்றனர்" என்கிறது கோட்டை வட்டாரம்.

கோட்டையில் கிசுகிசு

இதனால் உயரதிகாரிகளின் இந்த அழுத்தங்கள் பரிசீலிக்கப்படுகிறதாம். அந்த வகையில் கிரானைட் தொழிலதிபர் விவகாரத்தில், யாராவது, சில கீழ் நிலை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டு, உயரதிகாரிகள் காப்பாற்றப்பட்டு விடுவார்கள்" என்கிறார்கள் போக்சோ குற்ற வழக்குகளை ஆராயும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்...!!

இதனால், இந்த விவகாரத்தில் அடுத்ததாக யார் மீது நடவடிக்கை பாயும் என்பதைவிட, அதிகாரிகள் லாபியின் அழுத்தத்துக்கு விஜய் அரசு என்ன பதில் கொடுக்கப் போகிறது? என்பதுதான் தற்போது கோட்டையில் மிக முக்கிய கேள்வியாக மாறியுள்ளது.

- நமது சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+