தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! மருத்துவ துறை செயலாளராக சுப்ரியா சாஹு நியமனம்! அப்போ ககன்தீப்?
சென்னை: தமிழகத்தில் முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் வனத் துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாகு மருத்துவத் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மருத்துவத் துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி ஊரக வளர்ச்சித் துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டார். அது போல் வனத்துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாஹு மருத்துவத் துறை செயலாளராக மாற்றப்பட்டார்.

அது போல் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் உயர்கல்வித் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை முதன்மை செயலாளராக சந்திர மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நீர்வளத் துறை கூடுதல் செயலாளராக இருந்த சாக்சேனா செய்தி மற்றும் அச்சு காகிதத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மணிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சுற்றுச்சூழல் கால நிலை மாற்றம் வனத்துறை முதன்மை செயலாளராக செந்தில் குமாரும் பொதுப் பணித் துறை கூடுதல் செயலாளராக மங்கத் ராம் சர்மாவும் சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநராகவும் ஜான் லூயிஸும் அரசு கேபிள் மேலாண்மை இயக்குநராக வைத்தியநாதனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications