Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனி எங்க இதயத்தை எங்கே தொலைப்பது? இன்றோடு தரைமட்டமாகும் உதயம் தியேட்டர்! குமுறும் சென்னை ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றான உதயம் திரையரங்கம் இன்று முதல் இடிக்கப்படுகிறது. சென்னையின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றான உதயம் அடுக்குமாடி குடியிருப்பாக மாற இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த தியேட்டர் குறித்தான நினைவுகளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

சென்னையில் மெரினா பீச், ஜெமினி பிரிட்ஜ், எல்ஐசி டவர் என பல பல அடையாளங்கள் இருந்தாலும், பொழுதுபோக்கு பிரியர்களுக்கு மறக்க முடியாதது உதயம் திரையரங்கம். அசோக் பில்லர் ஒரு அடையாளம் என்றால் உதயம் தியேட்டர் சென்னையின் இன்னொரு அடையாளம் என்று தான் கூற வேண்டும்.

udhayam theatre chennai cinema

'உதயம் தியேட்டரில என் இதயத்தை தொலைச்சேன்' என்ற பாடல் சென்னை வாசிகளுக்கு மிகவும் பிடித்தது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக உதயம் திரையரங்கம் திகழ்கிறது.

1980 கால கட்டங்களில் தொடங்கப்பட்ட உதயம் திரையரங்கம் இன்றளவும் வெற்றிகரமான திரையரங்காக வலம் வருகிறது. உதயம் தியேட்டர் தொடங்கப்பட்ட போதும், அதற்குப் பிறகும் தொடங்கப்பட்ட பல தியேட்டர்கள் மூடு விழா கண்டு கல்யாண மண்டபங்களாகவும், அடுக்குமாடி குடியிருப்புகளாகவும், வணிக வளாகங்களாகவும் மாறி இருக்கின்றன. ஆனால் 40 ஆண்டுகளுக்கு மேலாக சென்னையின் முக்கிய அடையாளமாக உதயம் திரையரங்கம் திகழ்கிறது.

udhayam theatre chennai cinema

உதயம், சூரியன், சந்திரன் என மூன்று திரைகளோடு தொடங்கப்பட்ட அந்தத் திரையரங்கம் பின்னர் ஒரு பிரச்சினை காரணமாக இரண்டாகப் பிரிக்கப்பட்டது. கூடுதலாக மினி உதயம் என மேலும் ஒரு ஸ்கிரீன் உருவாக்கப்பட்டது. தற்போது மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் வந்திருக்கலாம். ஆனால் அப்போதே மல்டிபிளக்ஸ் தியேட்டராக வலம் வந்தது உதயம். ரஜினி, கமல், அஜித், விஜய் தொடங்கி, சிம்பு, தனுஷ் தற்போது இருக்கும் ஹரிஷ் கல்யாண் வரை பல நடிகர்களின் ஓபனிங் சீன்களை பார்த்த வரலாறு உதயம் திரையரங்க ரசிகர்களுக்கு உண்டு.

udhayam theatre chennai cinema

படையப்பா, அருணாச்சலம், பாட்ஷா, காதல் மன்னன், போக்கிரி என பல வெற்றி படங்களை 100 நாட்களுக்கு மேல் ஓட வைத்தது தான் உதயம் திரையரங்கம். தொடர்ந்து டிஜிட்டல் யுகத்தில் மல்டிபிளக்ஸ் கலாச்சாரம் வந்த பிறகு உதயம் திரையரங்கின் ஓட்டம் குறைய தொடங்கியது. தொடர்ந்து பல சட்ட சிக்கல்களால் அந்த திரையரங்கம் நீதிமன்ற கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், 2009 ஆம் ஆண்டு பரமசிவம் என்ற அதன் ஐந்து உரிமையாளர்களில் ஒருவர் 80 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார்.

udhayam theatre chennai cinema

இதை அடுத்து அந்த திரையரங்கம் விற்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. தமிழகத்தின் பிரபலமான கட்டுமான நிறுவனம் ஒன்று அந்த இடத்தை வாங்கி பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்பை கட்டை இருப்பதாக தகவல் வெளியான நிலையில் உதயம் திரையரங்கின் ரசிகர்கள் கடும் சோகத்தில் மூழ்கினர். கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு உதயம் திரையரங்கு குறித்த பதிவுகள் தான் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து இருந்தது.

udhayam theatre chennai cinema

இந்த நிலையில் 40 ஆண்டு கால சென்னையில் சினிமா கனவுகளை சுமந்திருந்த உதயம் அஸ்தமனம் ஆகப்போகிறது. ஏற்கனவே சென்னையில் சாந்தி, ஏவிஎம் ராஜேஸ்வரி, பங்கஜம், அகஸ்தியா, ராஜேஸ்வரி உள்ளிட்ட தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் அதில் உதயமும் இணைந்துள்ளது.

udhayam theatre chennai cinema

இன்று உதயம் திரையரங்கை இடிப்பதற்கான பணிகள் தொடங்க உள்ளது. இதை அடுத்து சென்னை ரசிகர்கள் அங்கு சென்று செல்ஃபி எடுத்து உதயம் தியேட்டர் உடனான தங்கள் நினைவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். கட்டிடத்தை இடிக்கும் பணிகள் நிறைவடைந்ததும் அங்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகள் தொடங்கும் என கூறப்படுகிறது.

udhayam theatre chennai cinema
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+