இதயம் மட்டுமல்ல உதயமே தொலைய போகுது! சென்னையில் அஸ்தமனமாகும் உதயம் தியேட்டர்! இதுதான் கடைசி படமாமே!?
சென்னை: சென்னையின் மிக முக்கிய அடையாளமான ஒன்றான உதயம் திரையரங்கம் விரைவில் மூடப்படுகிறது. பல வெள்ளி விழா படங்களை கண்ட இந்த திரையரங்கில் கடைசி படம் வெளியாக இருக்கும் நிலையில், அதற்குப் பிறகு அது அடுக்குமாடி குடியிருப்பாக மாற இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த தியேட்டர் குறித்தான நினைவுகளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
சென்னையில் மெரினா பீச், ஜெமினி பிரிட்ஜ், எல்ஐசி டவர் என பல பல அடையாளங்கள் இருந்தாலும், பொழுதுபோக்கு பிரியர்களுக்கு மறக்க முடியாதது உதயம் திரையரங்கம்.

'உதயம் தியேட்டரில என் இதயத்தை தொலைச்சேன்' என்ற பாடல் சென்னை வாசிகளுக்கு மிகவும் பிடித்தது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக உதயம் திரையரங்கம் திகழ்கிறது.
1980 கால கட்டங்களில் தொடங்கப்பட்ட உதயம் திரையரங்கம் இன்றளவும் வெற்றிகரமான திரையரங்காக வலம் வருகிறது. உதயம் தியேட்டர் தொடங்கப்பட்ட போதும், அதற்குப் பிறகும் தொடங்கப்பட்ட பல தியேட்டர்கள் மூடு விழா கண்டு கல்யாண மண்டபங்களாகவும், அடுக்குமாடி குடியிருப்புகளாகவும், வணிக வளாகங்களாகவும் மாறி இருக்கின்றன. ஆனால் 40 ஆண்டுகளுக்கு மேலாக சென்னையின் முக்கிய அடையாளமாக உதயம் திரையரங்கம் திகழ்கிறது.
உதயம், சூரியன், சந்திரன் என மூன்று திரைகளோடு தொடங்கப்பட்ட அந்தத் திரையரங்கம் பின்னர் ஒரு பிரச்சினை காரணமாக இரண்டாகப் பிரிக்கப்பட்டது. கூடுதலாக மினி உதயம் என மேலும் ஒரு ஸ்கிரீன் உருவாக்கப்பட்டது. தற்போது மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் வந்திருக்கலாம். ஆனால் அப்போதே மல்டிபிளக்ஸ் தியேட்டராக வலம் வந்தது உதயம். ரஜினி, கமல், அஜித், விஜய் தொடங்கி, சிம்பு, தனுஷ் தற்போது இருக்கும் ஹரிஷ் கல்யாண் வரை பல நடிகர்களின் ஓப்பனிங் சீன்களை பார்த்த வரலாறு உதயம் திரையரங்க ரசிகர்களுக்கு உண்டு.
படையப்பா, அருணாச்சலம், பாட்ஷா, காதல் மன்னன், போக்கிரி என பல வெற்றி படங்களை 100 நாட்களுக்கு மேல் ஓட வைத்தது தான் உதயம் திரையரங்கம். தொடர்ந்து டிஜிட்டல் யுகத்தில் மல்டிபிளக்ஸ் கலாச்சாரம் வந்த பிறகு உதயம் திரையரங்கின் ஓட்டம் குறைய தொடங்கியது. தொடர்ந்து பல சட்ட சிக்கல்களால் அந்த திரையரங்கம் நீதிமன்ற கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், 2009 ஆம் ஆண்டு பரமசிவம் என்ற அதன் ஐந்து உரிமையாளர்களில் ஒருவர் 80 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார். இதை அடுத்து அந்த திரையரங்கம் விற்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
தமிழகத்தின் பிரபலமான கட்டுமான நிறுவனம் ஒன்று அந்த இடத்தை வாங்கி பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்பை கட்டை இருப்பதாக தகவல் வெளியான நிலையில் உதயம் திரையரங்கில் ரசிகர்கள் கடும் சோகத்தில் மூழ்கினர். கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு உதயம் திரையரங்கு குறித்த பதிவுகள் தான் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து இருந்தது.
இந்த நிலையில் 40 ஆண்டு கால சென்னையில் சினிமா கனவுகளை சுமந்திருந்த உதயம் அஸ்தமனம் ஆகப்போகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நாளை வெளியாகும் வேட்டையன் படம் தான் அந்த தியேட்டரில் கடைசியாக வெளிவர இருக்கும் திரைப்படம் என்று கூறுகின்றனர். அந்த படம் வெளியானதற்கு பிறகு தியேட்டர் இடிக்கப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
வேட்டையன்: டிஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் புதிய படம் வேட்டையன். தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளில் நாளை ஆயுத பூஜையை குறிவைத்து இந்த படம் வெளியாகிறது. லைகா ப்ரொடக்ஷன் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார் அனிருத்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமல்லாது, அமிதாப்பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா டகுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தில் இடம் பெற்று இருந்த மனசிலாயோ பாடல் வெளியாகி ரசிகர்களை துள்ளல் ஆட்டம் போட வைத்தது குறிப்பிடத்தக்கது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications