ICSE Class 10, Plus 2 results: ஐசிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது! தேர்ச்சி சதவீதம் எவ்வளவு?
சென்னை: ஐசிஎஸ்இ 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன் தேர்ச்சி விகிதங்கள் மற்றும் மதிப்பெண்களை எப்படி டவுன்லோடு செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (CISCE), 2026-ஆம் ஆண்டிற்கான ஐசிஎஸ்இ (ICSE) 10-ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. நாடு முழுவதும் சுமார் 4 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வு முடிவுகளைக் கீழ்க்கண்ட அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்:
cisce.org
results.cisce.org
தங்களின் Unique ID மற்றும் Index Number ஆகியவற்றை உள்ளீடு செய்து மாணவர்கள் தங்கள் மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தேர்ச்சி விவரங்கள் மற்றும் சிறப்பம்சங்கள்
தேர்ச்சி விகிதம்: இந்த ஆண்டு (2026) 12 ஆம் வகுப்பில் 99.13 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவர்கள் 98.81 சதவீதமும் மாணவிகள் 99.13 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அது போல் 10ஆம் வகுப்பில் 99.18 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவியர் சாதனை: வழக்கம் போலவே மாணவர்களை விட மாணவியர் அதிக தேர்ச்சி விகிதத்தைப் பெற்று முன்னிலை வகிக்கின்றனர்.
டிஜிலாக்கர் (DigiLocker): மாணவர்கள் இணையதளம் தவிர்த்து, டிஜிலாக்கர் செயலி மூலமாகவும் தங்கள் டிஜிட்டல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மறுமதிப்பீடு மற்றும் மேம்பாட்டுத் தேர்வுகள்
மறுமதிப்பீடு (Rechecking): தங்கள் மதிப்பெண்களில் அதிருப்தி உள்ள மாணவர்கள், மே 1 முதல் மே 4 வரை மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான கட்டணம் பாடத்திற்கு தலா ₹1,000 ஆகும்.
மேம்பாட்டுத் தேர்வு (Improvement Exam): மதிப்பெண்களை உயர்த்த விரும்பும் மாணவர்களுக்கான மேம்பாட்டுத் தேர்வுகள் ஜூன் 15 ஆம் தேதியில் நடத்தப்பட உள்ளன.
தற்போது வெளியிடப்பட்டுள்ள இணையதள மதிப்பெண் பட்டியல் தற்காலிகமானது (Provisional) என்பதால், மாணவர்கள் சில நாட்களில் தங்கள் பள்ளிகள் மூலம் அசல் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
மாணவர்கள் கவனத்திற்கு: அதிகாரப்பூர்வ இணையதளங்களில் அதிகம் பேர் தேர்வு முடிவுகளை பார்பபதால் சர்வர் ஸ்லோவாக இருக்கிறது. எனவே இணையதளங்களில் முடியாவிட்டால் எஸ்எம்எஸ் (SMS) மூலமாகவும் முடிவுகளைப் பெறலாம். அதற்கு 'ICSE ' எனத் டைப் செய்து 09248082883 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.
கடந்த ஆண்டு வடக்கு மண்டலத்தில் 98.97 சதவீதமும், கிழக்கில் 98.76% , மேற்கில் 99.72%, தெற்கில் 99.76%, வெளிநாட்டு மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றிருந்தனர். இந்த ஆண்டு (2026) 12 ஆம் வகுப்பில் 99.13 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவர்கள் 98.81 சதவீதமும் மாணவிகள் 99.13 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அது போல் 10ஆம் வகுப்பில் 99.18 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications