சீமான் சொன்ன ஒற்றை வார்த்தை.. நாதகவில் அதிகரிக்கும் அதிருப்தி.. சாட்டையால் வந்த வினை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாதகவில் இருக்கும் திமுக எதிர்ப்பு அணி நிர்வாகிகள் கடுமையான அதிருப்தியில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. விஜய் ஆட்சிக்கு வந்த பின், நாதக தரப்பில் வெளியாகும் வீடியோக்களில் திமுக ஆதரவு நிலைப்பாடு அதிகம் தென்படுவதாகவும் சீமானுக்கு நேரடியாக புகார் அனுப்பப்பட்டிருக்கிறது. இதனை கவனித்த சீமான், பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.

அம்பை தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் களமிறங்க உள்ளார். அவரை பொது வேட்பாளராக களமிறக்க நாதகவினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவு அளிக்க வேண்டும் என்று சீமானும் விரும்புகிறார். இதனால் நாதக கொஞ்சம் கொஞ்சமாக திமுக கூட்டணியில் இணையுமோ என்ற கேள்விகளும் அதிகரித்துள்ளது.

Seeman NTK sattai duraimurugan

திமுக கூட்டணியில் இணைய சீமான் ஒப்புக் கொண்டால் மட்டுமே, அவரை வேட்பாளராக அறிவிக்க ஸ்டாலின் பரிசீலனை செய்வார். இதனிடையே நாம் தமிழர் கட்சியில் இருந்து திமுக எதிர்ப்பு அணியினர் கடுமையான அதிருப்தியில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக சாட்டை துரைமுருகனின் வீடியோக்கள் திமுக சார்பு தன்மையுடன் இருப்பதாக சீமானிடம் நேரடியாக புகார் கூறி இருக்கின்றனர்.

அதேபோல் சீமானுக்கு பின் நாதகவின் முக்கிய முகமாக சாட்டை துரைமுருகன் வளர்ந்து வருவதால், சீனியர் நிர்வாகிகள் கடுமையான அதிருப்தியில் இருக்கின்றனர். அண்மையில் அம்பை தொகுதி தேர்தல் பொறுப்பை சாட்டை துரைமுருகனிடம் கொடுக்க வேண்டும் என்று நாதக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசப்பட்டது. இதனால் நாதகவில் உட்கட்சி பூசலும் தொடங்கி இருக்கின்றன.

இதனால் சாட்டை துரைமுருகன் திமுகவுக்கு சாதகமாக வீடியோக்களை வெளியிடுகிறார் என்று சீமானிடம் புகார் வாசித்திருக்கின்றனர். இதனை கவனித்த சீமான், விடுங்கப்பா என்று ஒற்றை வார்த்தையில் கடந்து சென்றிருக்கிறார். அதேபோல் சாட்டை துரைமுருகனிடமும், விஜய்யை எதிர்க்கும் வகையிலும், தவெகவை விமர்சிக்கும் வகையிலும் வீடியோக்களை வெளியிடுங்கள் என்று அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஒருமுறை சாட்டை யூடியூப் சேனலுக்கும், நாதகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சீமான் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனால் சாட்டை வீடியோக்களை பெரிதாக சீமான் கண்டுகொள்வதில்லை. பெயரளவில் சாட்டை துரைமுருகனை சீமான் கண்டிப்பதால், நாதகவில் உள்ள திமுக எதிர்ப்பு அணியினர் என்ன செய்வதென தெரியாமல் புலம்ப தொடங்கி இருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+