புளிச்ச மாவு இட்லி? தனுஷின் சூப்பர் நடிப்பு.. இட்லி கடை படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம்.. ஆனால்?
சென்னை: பிரபல நடிகர் தனுஷ் டைரக்டராக கலக்கி வரும் நிலையில், அவரது இயக்கத்திலேயே 'இட்லி கடை' படம் வெளியாகியிருக்கிறது. இது தனுஷ் நடிக்கும் 52-வது படமாகும்.. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.. டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம், நேற்று முதல் திரையரங்குகளில் வெளியானது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தன்னுடைய கருத்தை தன்னுடைய சேனலில் தெரிவித்துள்ளார்.
cheyaaru Balu Official என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, "ரொம்ப சிம்பிளான கதையை கையில் எடுத்துள்ளார் டைரக்டர் தனுஷ்.. இந்த படத்தின் மிக முக்கியமான விஷயம், ஒரு கிராம வாழ்க்கைக்குள் இருக்கிற எமோஷனல்தான்.. படம் துவங்கியலிருந்தே எமோஷனல் டச் ஆரம்பமாகிறது..

இட்லி கடை படம்
தனுஷ் கிராமத்து பையன் மாதிரியே தெரிகிறது.. பாங்காக்கில் இருக்கும்போது கோட்சூட்டுடன் அந்த லுக்கில் பளிச்சிட்டு நடிப்பில் அசத்தியிருக்கிறார் தனுஷ்.. அந்தந்த கேரக்டருடன் அப்படியே ஒன்றிவிடுகிறார் தனுஷ்.. அருண்விஜய், சத்யராஜ், ஷாலினி பாண்டே, பார்த்திபன், சமுத்திரகனி என அனைவருமே நடிப்பதற்கான வாய்ப்பு தரப்பட்டுள்ளது..
இந்த படத்தின் முதல் பாதி வேக வேகமாக நகர்வது போல உள்ளது.. அதிலும் எமோஷனல், சென்ட்டிமென்ட், இவைகளை தாண்டி தனுஷின் நடிப்பு என நகர்கிறது.. இரண்டாம் பாகம், துண்டு துண்டாக நகர்வது போல தெரிகிறது.. அதுமட்டுமல்லாமல் சில நம்பகத்தனமான விஷயங்களை இந்த படத்தில் சரி செய்திருக்கலாமே? என்றும் தோன்றுகிறது.
தனுஷ் சூப்பர் நடிப்பு
இந்த படத்தின் பலமே, படத்தில் நடித்திருப்பவர்கள்தான்.. குறிப்பாக தனுஷ், நித்யா மேனன், சத்யராஜை சொல்லலாம்.. அதிலும் என்னை அறிந்தால் படத்துக்கு பிறகு, இந்த படத்தில் அசால்ட்டாக அருண் விஜய் நடித்துள்ளார்.. தொடர்ந்து வில்லனாகவே நடிக்கலாம்.. அந்த அளவுக்கு பிரம்மாதமாக நடித்திருக்கிறார்.. ஈகோ என்ற விஷயத்தை, தன்னுடைய முக உணர்வுகளிலேயே காட்டிவிடுகிறார்..
இந்த படத்தில் சமுத்திரகனி, வில்லனா? காமெடி வில்லனா? என்ற சின்ன குழப்பம் வருகிறது.. பார்த்திபன் இந்த படத்தில் வேறு மாதிரியாக இருக்கிறார். நாம எதிர்பார்ப்பது போல அல்லாமல், அருமையாக கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளார்.. அதிலும் கிளைமேக்ஸில் தங்கமான ஆளுப்பா என்று ரசிகர்களையே சொல்ல வைத்து விடுகிறார்..
தனுஷின் சூப்பர் நடிப்பு
ஆனாலும் நம்பக்கத்தன்மை இந்த படத்தில் குறைவாகவே உள்ளது.. அந்த சின்ன ஊரில் இருக்கும் இட்லி கடையை புகழ்ந்து புகழ்ந்து பேசுவதற்கான காரணத்தை இன்னும் கூட வலுவாக சொல்லியிருக்கலாமே என்று தோன்றுகிறது..
அந்தவகையில் முதல் பாதி படம் வேகமாக நகர்ந்து, இரண்டாவது பாதி மெல்ல நகர்வதுடன், லாஜிக்கும் நிறைய இடத்தில் மிஸ்ஸாகிறது. சில சண்டை காட்சிகளை இன்னும் சரிசெய்திருக்கலாமே என்று தோன்றுகிறது.
இந்த படத்தின் பெரிய அசுரன் ஜிவி பிரகாஷ்தான்.. பல இடங்களில் பின்னணி இசை, பிஜிஎம் இந்த படத்தை வேற லெவலில் தூக்கி நிறுத்துகிறது.. அதிலும் தனுஷூக்கு ஸ்பெஷல் பிஜிஎம் போட்டுள்ளது சூப்பராக இருக்கிறது.. தற்போது விடுமுறை காலம் முடிந்ததும், அனைவரும் குடும்பத்துடன் சென்று பார்க்கக்கூடியதாக இட்லி கடை உள்ளது..












Click it and Unblock the Notifications