Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிரேனில் தூக்கிய போது சரிந்து விழுந்த விநாயகர் சிலை! சென்னையில் திடீர் பரபரப்பு.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பாலவாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டு வந்தது. அப்போது 500 கிலோவிற்கும் மேல் எடை கொண்ட விநாயகர் சிலை ஒன்றை கிரேன் மூலம் தூக்கிய போது அது கீழே விழுந்து சேதமடைந்தது. போலீசார் அவசரம் காட்டியதான் காரணமாகவே இப்படி நிகழ்ந்தது என்று காவல்துறையினருடன் சிலையை எடுத்து வந்த பொறுப்பாளர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 7 ம் தேதி கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி, தமிழகம் முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். சென்னையில் மட்டும் பல்வேறு இடங்களில் 1,524 சிலைகள் வைக்கப்பட்டிருந்தது.

chennai ganesh chaturthi vinayagar chaturthi procession

விநாயகர் சிலைகளுக்கு கடந்த ஒரு வாரமாக பூஜை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்க 3 நாட்கள் காவல்துறை அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி, கடந்த 11 ஆம் தேதியும் 14 ஆம் தேதியும் நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இந்த நிலையில் சென்னையில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பிரமாண்ட விநாயகர் சிலைகளுடன் ஊர்வலம் கோலாகலமாக இன்று நடைபெற்றது.

காலை 10 மணியில் இருந்தே விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று கடலில் கரைத்தனர்.
விநாயகர் சிலைகளுக்கு முன்னும், பின்னும் ஏராளமான பக்தர்கள் மேள தாளத்துடன் வந்தனர். சின்ன, சின்ன சிறிய சிலைகளில் ஆரம்பித்து இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, பாரத் இந்து முன்னணி உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான விநாயகர் சிலைகளும் கொண்டு வரப்பட்டு கரைக்கப்பட்டது.

சென்னையில் மட்டும் சுமார் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். சிலைகளை கரைக்க போலீசார் அனுமதி அளித்திருந்த பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை, காசிமேடு, திருவொற்றியூர், நீலாங்கரை 4 இடங்களிலும் அணி அணியாக விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டன. இதற்காக கடற்கரை பகுதிகளில் பெரிய விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக கிரேன் மற்றும் டிராலி வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.

கிரேன் மூலம் விநாயகர் சிலைகள் கடலுக்குள் கொண்டு செல்லப்பட்டபோது, பாதுகாப்பு கருதி சிலை அருகே யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனிடையே பாலவாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டு வந்தது. அப்போது 500 கிலோவிற்கும் மேல் எடை கொண்ட விநாயகர் சிலை ஒன்றை கிரேன் மூலம் தூக்கி கடலில் கரைக்கும் பணி நடைபெற்றது. லாரியில் இருந்து விநாயகர் சிலையை தூக்கும் போது அதிக எடை காரணமாக விநாயகர் சிலை கீழெ விழுந்தது உடைந்தது.

இதனால், காவல்துறையிறனருடன் சிலையை எடுத்து வந்த பொறுப்பாளர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவசரப்படுத்தியதே இதுபொன்ற நிகழ்வுகளுக்கு காரணம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். விநாயகர் சிலை கிழே விழுந்து உடைந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+