கோவை பெரியார் அறிவுலக ஊழல்! "திரிஷா விஜய்யை" காப்பாற்ற நினைக்கிறாரா Vijay? இடும்பாவனம் கார்த்திக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவை பெரியார் அறிவுலகத்தில் கொள்முதல் செய்த புத்தகங்களில் ஊழல் நடந்துள்ள நிலையில் முறைகேடு செய்தவர்களை கூண்டில் ஏற்ற விஜய்க்கு அரை மணிநேரம் போதும். அப்படியிருக்கும் போது எதற்காக அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறார் என நாதக நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் எழுத்தாளர் திரிஷா விஜய்யை காப்பாற்ற நினைக்கிறாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: திரிஷா விஜய்யைக் காப்பாற்ற நினைக்கிறாரா முதல்வர் விஜய்? 'அழகிய தமிழ் மகன்' , 'லியோ' ஆகிய இரு படங்களிலும், 'அந்த விஜய்தானா இந்த விஜய்?' எனும் ஒரு கேள்வியை மையப்படுத்தியே மொத்தப் படமும் பயணிக்கும். அதனை நிரூபிக்கப் படம் முழுக்கவும் மெனக்கெடல்கள் இருக்கும். எதற்கு இவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்? ஒரே ஒரு DNA Test எடுத்தால் யார் இவரெனத் தெரிந்துவிடுமே எனப் படம் பார்க்கும்போது தோன்றும். அது சரி! அதனைச் செய்துவிட்டால், அந்தப் படத்திற்குக் கதையே இல்லையே!

Idumbavanam Karthik

அதுபோல, சர்வ அதிகாரத்தையும் கொண்டிருக்கும் முதல்வர் விஜய், பெரியார் அறிவுலக முறைகேட்டில் மொத்தத் தகவல்களையும் உள்ளடக்கிய ஒரே ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட்டால், 'திமுக, தவெக எனும் இரு கட்சிகளில் யார் சொல்வது உண்மை?' என ஒரு நொடியில் தெரிந்துவிடும். அதனைச் செய்யாது, அரசியல் அறிக்கைவிட்டு, அழிச்சாட்டியம் செய்து கொண்டிருப்பது ஏன்? என்று புரியவில்லை.

அப்பழுக்கற்ற கட்சி

திமுக ஒன்றும் அப்பழுக்கற்ற கட்சியில்லை; ஊழல் எனும் பெருங்கடலில் மூழ்கி முத்தெடுத்த இயக்கம்தான். அக்கட்சி எல்லா வகை ஊழலும் செய்யும் சாத்தியம் 100 விழுக்காடு உண்டு. அந்த திமுகவின் ஆட்சியில் போலி நூல்கள் முறைகேடு நடைபெற்றதென்றால், அதனை அம்பலப்படுத்திக் குற்றவாளிகளைக் கூண்டிலேற்ற மொத்த அரசுத் துறைகளையும் தன்வசம் வைத்திருக்கிற முதல்வர் விஜய்க்கு அரை மணிநேரமே போதுமானது!

எதிர்க்கட்சித் தலைவர்கள்

எதிர்க்கட்சித் தலைவர்கள் அலைபேசியில் என்ன பேசிக் கொள்கிறார்கள்? என்பதுவரை ஒட்டுகேட்கும் சாத்தியமுள்ள அதிகாரத்தில் இருந்துகொண்டு அகல்விளக்கு பதிப்பகத்திடமிருந்தும், பீனிக்ஸ் பதிப்பகத்திடமிருந்தும் எந்தக் காலத்தில் நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டன? எப்போது பணம் செலுத்தப்பட்டது? அந்தப் பதிப்பகங்களைப் பரிந்துரைத்தது யார்? அதற்குக் கையெழுத்திட்டது யார்? போன்ற விவரங்களை வெளியிட்டு உண்மைத் தன்மையை வெளிப்படுத்த முதல்வர் விஜய் தயங்குவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

நூல் கொள்முதல்

கோவை பெரியார் அறிவுலகத்தில் நூல் கொள்முதல் மற்றும் விநியோகத்தில் மாபெரும் முறைகேடு நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கட்டுரையில் அம்பலமாகியுள்ளது. "நாலடியார் வாழ்வின் வழிகாட்டி" என்ற புத்தகத்தில் நாலடியார் கவிஞர் என எழுதியுள்ளதாகவும் 1969 ஆம் ஆம் ஆண்டு ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தார் என்று இன்னொரு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

எத்தனை நூல்கள்?

அது போல் இந்த முறைகேடுகள் மூலம் யாருக்குப் பணம் சென்றது, எத்தனை நூல்கள் விநியோகிக்கப்பட்டன என்பது குறித்து விசாரணைக் குழு அமைத்து உண்மைகளை வெளிக் கொண்டு வர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கீழடியில் நந்தி சிலை

அது போல் கீழடியில் நந்தி சிலை கிடைத்தது என ஒரு புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. அது போல் "அதிகாரத்தின் நிழலில்" என்ற புத்தகத்தை திரிஷா விஜய் என்ற எழுத்தாளர் எழுதியிருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+