கரூர் சம்பவத்தின்போது நிர்மல்குமார் யார் வீட்டு பாத்ரூமில் இருந்தார்? இடும்பாவனம் கார்த்திக் கேள்வி
சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி குறித்துச் சொல்கிறார்களே! கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது ஒரு மாதமாக நிர்மல் குமாரும், புஸ்ஸி ஆனந்தும் யார் வீட்டு பாத்ரூமில் ஒளிந்திருந்தார்கள் என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும் என நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கைது நடவடிக்கையின்போது, 3 மணிநேரம் உதயநிதி ஸ்டாலின் Bath Roomல் இருந்ததாகப் பேசியிருக்கிறார் அமைச்சர் நிர்மல்குமார்.

உதயநிதி எங்கு இருந்தார்? Bath Roomல்தான் இருந்தாரா? எவ்வளவு நேரம் இருந்தார்? என்பதை எல்லாம் திமுக தரப்புச் சொல்லட்டும். விளக்கட்டும். அதனைப் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையுமில்லை.
அதேசமயம், கரூர் பேரவலத்தின்போது ஒரு மாதகாலம் நிர்மல் குமாரும், புஸ்ஸி ஆனந்தும் யார் வீட்டு Bath Roomல் ஒளிந்துக் கிடந்தார்கள் என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும். இவ்வாறு அவர் விமர்சித்துள்ளார்.
சட்டசபையில் நேற்று நீதி, சிறை, சட்டம், எரிசக்தி, அறநிலையத் துறை மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்த போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.
அவர் கூறுகையில் மின்சாரத் துறை தவெக ஆட்சியில் சரிவர நிர்வகிக்கவில்லை என்றார். உடனே இதற்கு பதில் சொல்ல நிர்மல் குமார் எழுந்தார். அவர் எழுந்து, "கடந்த 5 ஆண்டுகளில் மின்சார வாரியம் பட்ட பாடுகளை சொல்கிறேன்" என பேச ஆரம்பித்தார். அப்போது செந்தில் பாலாஜி குறித்து ஏற்கெனவே விஜய் கரூரில் சொன்ன ஒரு வார்த்தையை (அவைக் குறிப்பில் இருந்து நீக்கம்) குறிப்பிட்டுவிட்டு உடனே சாரி சாரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி என குறிப்பிட்டார்.
உடனே திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து நிர்மல் குமார் அந்த வார்த்தையை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். மேலும் அந்த வார்த்தை அவைக்குறிப்பில் இருந்தும் நீக்கப்பட்டுவிட்டது.
அப்போது எழுந்த உதயநிதி ஸ்டாலின், "மாண்புமிகு சங்கி அமைச்சர்.. சாரி சாரி மாண்புமிகு எரிசக்தித் துறை அமைச்சர்" என குறிப்பிட்ட போது நிர்மல் குமார் கடும் கோபமடைந்தார். அவர் "மாண்புமிகு பாத்ரூமில் 3 மணி நேரம் அமர்ந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர்.." என எங்களுக்கு சொல்ல 5 நிமிடம் கூட ஆகாது.
அவர்கள் தவறாக பேசினால் எங்களுக்கும் பேச தெரியும் என்றார். இதனால் மேலும் கடுப்பான உதயநிதி, "தமிழகத்தில் யார் யார் பாத்ரூமில் எவ்வளவு நேரம் உட்கார்ந்திருக்கிறார்கள் என்பதை கண்காணிக்க ஒரு அமைச்சரை வைத்திருக்கிறீர்ளா என நான் கேட்க விரும்புகிறேன். முதலில் யார் தவறாக பேசினார்கள் என்பது பேரவைத் தலைவராகிய உங்களுக்கு தெரியும்" என்றார்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தின் போது விஜய், புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் வெளியே வரவில்லை. இதைத்தான் இடும்பாவனம் கார்த்திக், சுட்டிக் காட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications
